search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PM Security"

    மாவோயிஸ்டுகள் பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல சதித்திட்டம் தீட்டியுள்ளதாக தகவல் வெளியாகியதையடுத்து பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் புதிய கெடுபிடிகள் செய்யப்பட்டுள்ளது. #PMModi
    புதுடெல்லி :

    மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் 5 பேரை போலீசார் சில வாரங்களுக்கு முன்னர் கைது செய்தனர். அவர்களுக்கு மாவோயிஸ்டு இயக்கத்தை சேர்ந்தவர்கள் என அம்மாநில போலீசார் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஒரு கடிதத்தில் பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் திட்டமிட்டது தெரியவந்தது. நாடுமுழுவதும் இவ்விவகாரம் பெரும் விவாதப்பொருளானது.

    மாவோயிஸ்டுகள் பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல சதித்திட்டம் தீட்டியுள்ளதாக தகவல் வெளியாகியதையடுத்து, சமீபத்தில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பிரதமர் மோடியின் பாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை கூட்டி உள்துறை செயலாளர், தேசிய பாதுகாப்பு முகமை, புலனாய்வு முகமை தலைவர் ஆகியோருடன் பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தினார்.

    இந்நிலையில், 2019 பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரதமருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.

    மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் யாரும் சிறப்பு பாதுகாப்பு படையின் அனுமதியின்றி பிரதமரை நெருங்க அனுமதிக்க கூடாது என பிரதமரின் புதிய பாதுகாப்பு வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், பாதுகாப்பு அச்சுருத்தல் தொடர்பாக சிறப்பு பாதுகாப்புப்படையின் அறிவுறுத்தலின் பேரில் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு மோடி சாலை பிரச்சாரங்களில் ஈடுபடமாட்டார். அதற்கு பதிலாக பொதுக்கூட்டங்களில் மட்டுமே உரையாற்றுவார். இந்த புதிய விதிமுறைகள் பிரதமரின் பாதுகாப்பு குழுவிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.  #PMModi
    ×