search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "perpetrator praised"

    காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் 40 வீரர்களின் உயிர்களை பறித்த பயங்கரவாதியை விடுதலைப் போராளியாக சித்தரித்து பாகிஸ்தான் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. #Pulwamaattack #Freedomfighter #Pakistanimedia
    இஸ்லாமாபாத்:

    புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது குறித்து டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் எல்லா வகையிலான பயங்கரவாதத்தையும் வன்மையாக கண்டிப்பதாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்நிலையில், பாகிஸ்தான் மக்களின் மனநிலையும் நிலைப்பாடும் நமக்கு எதிர்மாறாக உள்ளது.

    இந்த தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் நாளேடுகளிலும், தொலைக்காட்சி உள்ளிட்ட பிற ஊடகங்களிலும் செய்தி வெளியாகி வருகின்றன.

    நமது உளவுத்துறையினர் உறுதிப்படுத்தி இருப்பதைப்போல் பாகிஸ்தானில் செயல்படும் ‘ஜெய்ஷ்-இ-முஹம்மத்’ பயங்கரவாத அமைப்புக்கும் புல்வாமா தாக்குதலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை சித்தரிப்பாக நிரூபிக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும், பாகிஸ்தானில் மிகவும் பிரபலமான நாளேடான ‘தி நேஷன்’ பத்திரிகை ‘புல்வாமாவில் தாக்குதல் நடத்திய விடுதலைப் போராளி’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டுள்ளது.



    இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக ஏற்கனவே ‘ஜெய்ஷ்-இ-முஹம்மத்’ பயங்கரவாத அமைப்பு அறிவித்து, தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய நபரின் பெயர் மற்றும் புகைப்படம் அனைத்தையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ‘முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும்’ பாகிஸ்தான் உளவுத்துறை மற்றும் ஊடகங்களின் முயற்சி நிச்சயமாக தோல்வியில்தான் முடியும்.

    புல்வாமா தாக்குதலுக்கான உரிய விலையை பாகிஸ்தான் தந்தே தீர வேண்டும் என நடுநிலையாளர்கள் நம்புகின்றனர். #Pulwamaattack #Freedomfighter #Pakistanimedia
     
    ×