என் மலர்
நீங்கள் தேடியது "Periyanaiaki Ambal"
- தேவகோட்டை அருகே பெரியநாயகி அம்பாள்-பழம்பதிநாதர் கோவிலில் லட்சதீப பெருவிழா
- பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள வெளிமுத்தி கிராமத்தில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தான ஆளுகைக்கு உட்பட்ட பெரியநாயகி அம்பாள் பழம்பதிநாதர் கோவில் உள்ளது. இது பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில் லட்சதீப பெருவிழா நடந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் சடகோப ராமானுஜ ஜீயர், கோவை ஆனந்த கல்பா பவுண்டேஷன் ஈஸ்வரன் குருஜி, அமராவதி புதூர் சாரதா நிகேதன் மகளிர் கல்லூரி செயலாளர் யதீசுவரி சாரதேசுவரி பிரியா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
லட்ச தீப விழாவில் ஓம் நமச்சிவாயம், லிங்கம், தீபம், வேல் போன்ற வடிவங்களில் அகல் விளக்குகளை வரிசைப்படுத்தி கோவிலை சுற்றி மேல் மற்றும் கீழ் பகுதிகளில் வைத்தனர். பொதுமக்கள் இந்த அகல்விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.
விளக்குகள் வெளிச்சத்தில் கோவில் ஜொலித்தது. லட்சதீப விழாவை தொடர்ந்து மீனாட்சி திருக்கல்யாணம் என்ற தலைப்பில் கதை நிகழ்ச்சி நடந்தது. விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.






