search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pepper kulambu"

    கறிவேப்பிலை மிளகு குழம்பு பிரசவித்த பெண்களுக்கு மிகவும் நல்லது. மழை நேரத்தில் ஏற்படும் ஜுரம், உடல் வலியில் இருந்தும் நிவாரணம் அளிக்கும்.
    தேவையான பொருட்கள் :

    கறிவேப்பிலை - 2 கைப்பிடி அளவு,
    மிளகு - 20,
    உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,
    துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்,
    சீரகம் - ஒரு டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 2,
    புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு,
    கடுகு - ஒரு டீஸ்பூன்,
    எண்ணெய் - 4 டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    வாணலியில் எண்ணெய் விட்டு மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, சீரகம் ஆகியவற்றை நன்றாக வறுத்து வைத்துக்கொள்ளவும்.

    கறிவேப்பிலையை எண்ணெய் விட்டு வதக்கி, வறுத்து வைத்தவற்றுடன் சேர்த்து… புளி, உப்பு சேர்த்து, நீர் விட்டு நைஸாக மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு தாளித்து, அரைத்ததை போட்டு கொதிக்கவிட்டு ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.

    சூப்பரான கறிவேப்பிலை மிளகு குழம்பு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×