என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "People request petition"

    • குளத்தை தனிநபருக்கு ஏலம் விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.
    • அசம்பாவிதங்கள் எங்கள் பகுதிகளில் நடைபெறாமல் இருப்பதற்கு எங்கள் ஊர் குளத்தை எங்களுக்கு மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே அடியனூத்து ஊராட்சிக்கு உட்பட்ட என்.பெருமாள் கோவில்பட்டியில் உள்ள மீரா ராவுத்தர் குளத்தை தனிநபருக்கு ஏலம் விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

    அந்த மனுவில் குறிப்பிட்டிருந்ததாவது,

    திண்டுக்கல் அருகே அடியனூத்து கிராமத்திற்கு உட்பட்ட என்.பெருமாள் கோவில் பட்டியில் மீராராவுத்தர் குளம் உள்ளது. சிறுமலையிலிருந்து பருவ மழை பெய்து சூசையார்புரம், நல்லாம்பட்டி, என்.பெருமாள் கோவில்பட்டி ஆகிய பகுதிகளின் வழியாக மீரா ராவுத்தர் குளத்திற்கு நீர் வரும்போது ஊர் பொதுமக்கள் சேர்ந்து மீன் வாங்கி குளத்தில் விடுவோம்.

    பின் நீர் வற்றும் போது எங்கள் ஊரைச் சுற்றியுள்ள மக்களுக்கு அறிவிப்பு விட்டு மீன்பிடி திருவிழா காலம் காலமாக நடத்தி வந்து கொண்டிருக்கிறோம். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீன்பிடி திருவிழா நடந்தது.

    அதேபோல் இந்த ஆண்டும் மீன்பிடி திருவிழா நடத்த உள்ளோம். இதற்கிடையில் மேற்கு மரியநாதபுரத்தை சேர்ந்த ஒருவர் எங்கள் ஊர் குளத்தை ஏலம் எடுத்ததாக கூறி குளத்தின் கரையை சுத்தம் செய்து அங்கேயே தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார். ஊர் பொதுமக்கள் அவரிடம் சென்று கேட்டபோது தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டுகிறார்.

    மேலும் குளம் ஏலம் சம்பந்தமாக மேற்கு மரியநாதபுரத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் வாலிபர் ராகேஷ் குமார் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார்.ஆகவே இதுபோன்ற அசம்பாவிதங்கள் எங்கள் பகுதிகளில் நடைபெறாமல் இருப்பதற்கு எங்கள் ஊர் குளத்தை எங்களுக்கு மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

    ×