என் மலர்

  நீங்கள் தேடியது "peanut candy"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சிறப்பு அழைப்பாளராக கோவில்பட்டி ஆர்.டி.ஓ. மகாலட்சுமி கலந்து கொண்டு குழந்தைகளுக்கு கடலைமிட்டாய் வழங்கி சிறப்புரையாற்றினார்.
  • இயற்கையான, சத்துள்ள உணவுகளை அனைவரும் சாப்பிட வேண்டும் கே.என்.ஆர். முகா கடலை மிட்டாய் நிறுவனத்தின் உரிமையாளர் கண்ணன் கூறினார்.

  கோவில்பட்டி:

  சத்துள்ள உணவு வகைகளை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும், இயற்கையுடன் கூடிய உணவுகளை அனைவரும் உண்ண வேண்டும் என்பதனை வலியுறுத்தும் வகையில் கோவில்பட்டி கே.என்.ஆர். முகா கடலை மிட்டாய் நிறுவனம் சார்பில் கோவில்பட்டியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் வித்யா பிரகாசம் மன வளர்ச்சி குன்றியோருக்கான பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

  இதில் சிறப்பு அழைப்பாளராக கோவில்பட்டி ஆர்.டி.ஓ. மகாலட்சுமி கலந்து கொண்டு குழந்தைகளுக்கு கடலைமிட்டாய் வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் கே.என்.ஆர். முகா கடலை மிட்டாய் நிறுவனத்தின் உரிமையாளர் கண்ணன், வித்யா பிரகாசம் மன வளர்ச்சி குன்றியோருக்கான பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இது குறித்து கே.என்.ஆர். முகா கடலை மிட்டாய் நிறுவனத்தின் உரிமையாளர் கண்ணன் கூறுகையில், இயற்கையான, சத்துள்ள உணவுகளை அனைவரும் சாப்பிட வேண்டும். அப்போது தான் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும், மேலும் இயற்கை மற்றும் சுவையுடன் கூடிய தரம் கொண்ட புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாயை அனைவரும் சாப்பிட வேண்டும் என்ற நோக்கிலும் பள்ளி குழந்தைகளுக்கு இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தங்களது கே.என்.ஆர். முகா கடலை மிட்டாய் நிறுவனம் மூலமாக மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.

  ×