search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "patna police"

    பாட்னாவில் இலவசமாக காய்கறி கொடுக்க மறுத்த சிறுவனை சிறையில் அடைத்தது தொடர்பாக 11 போலீஸ்காரர்களை சஸ்பெண்டு செய்து ஐ.ஜி. உத்தரவிட்டார். #patnapolice
    பாட்னா:

    பீகார் மாநிலம் பாட்னாவில் சாலையோரம் வியாபாரம் செய்பவர்களிடம் போலீசார் கட்டாய மாமூல் வசூலில் ஈடுபட்டனர். அப்போது ஒரு சிறுவன் இப்போது தான் வந்தேன் வியாபாரம் ஆகவில்லை என்றான்.அப்படியானால் காய்கறியாக கொடு என்று கேட்டனர். அதற்கு சிறுவன் மறுத்து விட்டான். இதையடுத்து சிறுவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    போலீசாரின் இந்த செயல் குறித்து சிறுவனின் தந்தை முதல்-மந்திரி நிதிஷ்குமாருக்கு கடிதம் எழுதினார். அவர் உடனே விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து பாட்னா ஐ.ஜி. நய்யார் உசைன்கான் இதுபற்றி விசாரிக்க 3 பேர் குழுவை நியமித்தார். அவர்கள் விசாரணை நடத்தி ஐ.ஜி.யிடம் அறிக்கை தாக்கல் செய்தனர். இதில் சிறுவனுக்கு எதிராக போலீசார் விதியை மீறி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சிறையில் அடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதையடுத்து சம்பந்தப்பட்ட 2 போலீஸ் நிலைய அதிகாரிகள் உள்பட 11 போலீஸ்காரர்களை சஸ்பெண்டு செய்து ஐ.ஜி. உத்தரவிட்டார். மேலும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சிறுவனை விடுதலை செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கவும் உத்தரவிடப்பட்டது. #patnapolice
    ×