என் மலர்
நீங்கள் தேடியது "Parangi Malai motor cycle theft"
பரங்கிமலையில் சப்-இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிளை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆலந்தூர்:
சென்னை ஐகோர்ட்டு பாதுகாப்பு பிரிவில் சப்- இன்ஸ்பெக்டராக இருப்பவர் கருணாநிதி. இவர் கடந்த 13-ந்தேதி போலீஸ் ரோந்து மோட்டார் சைக்கிளில் பரங்கிமலை ரெயில் நிலையம் சென்றார். அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு ரெயிலில் சென்றார்.
இரவு திரும்பி வந்த போது அந்த மோட்டார் சைக்கிளை யாரோ திருடிச் சென்று விட்டது தெரிய வந்தது. ஆதம்பாக்கம் போலீசார் தனிப்படை அமைத்து மோட்டார் சைக்கிள் திருடனை தேடி வருகிறார்கள்.






