search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Panjalinga falls"

    • அருவியில் விழுகின்ற மூலிகை தண்ணீரில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக சுற்றுலா பயணிகள் நாள்தோறும் திருமூர்த்திமலைக்கு வருகை தருகின்றனர்.
    • நேற்று மதியம் அருவியின் நீராதாரங்களில் திடீரென சாரல் மழை பெய்தது.அதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

    உடுமலை:

    உடுமலையை அடுத்த திருமூர்த்திமலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது.உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த அருவிக்கு மேல் குருமலை,கீழ்குருமலை, குழிப்பட்டி பகுதியில் உற்பத்தியாகின்ற கொட்டையாறு,பாரப்பட்டியாறு,குருமலைஆறு,கிழவிப்பட்டிஆறு, உப்புமண்ணபட்டிஆறு,பாலாறு,உழுவியாறு உள்ளிட்டவை நீராதாரமாக உள்ளது. வனப்பகுதியில் மழைப்பொழிவு ஏற்படும்போது ஆறுகளில் நீர்வரத்தை பெறுகிறது.

    வனப்பகுதியில் பல்வேறு பகுதியில் ஓடிவருகின்ற ஆறுகள் பஞ்சலிங்கங்களுக்கு அருகில் ஒன்று சேர்ந்து அருவியாக கொட்டுகிறது. அருவியில் விழுகின்ற மூலிகை தண்ணீரில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் திருமூர்த்திமலைக்கு வருகை தருகின்றனர்.

    இந்த நிலையில் வடகிழக்கு பருவமழைக்கு பின்பு அருவியின் நீராதாரங்களில் மழை பெய்யவில்லை.ஆனாலும் ஓரளவுக்கு நீர்வரத்து இருந்து வந்தது.இதையடுத்து சுற்றுலா பயணிகள் பஞ்சலிங்க அருவிக்கு உற்சாகத்தோடு வந்து குளித்து மகிழ்ந்தனர். இந்த சூழலில் வனப்பகுதியில் கடந்த சில மாதங்களாக வெப்பத்தின் தாக்குதல் அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக அருவியின் நீராதாரங்களில் நீர்வரத்து குறைந்ததால் பஞ்சலிங்க அருவியிலும் நீர்வரத்து குறைந்தது.

    இந்த நிலையில் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த வாரம் திடீரென மழை பெய்தது.இதன் காரணமாக அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது.அதைத் தொடர்ந்து கோடை விடுமுறையை கழிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்தோடு குடும்பம் குடும்பமாக அருவியில் குளித்து வந்தனர். இதனால் நாள்தோறும் சுற்றுலா பயணிகள் கூட்டம் கணிசமான அளவில் இருந்து வந்தது.இந்த சூழலில் நேற்று மதியம் அருவியின் நீராதாரங்களில் திடீரென சாரல் மழை பெய்தது.அதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

    நேற்று பெய்த மழையால் அருவிக்கு சற்று நீர்வரத்து அதிகரித்து உள்ளது. குறைவான தண்ணீரில் குளித்து ஏமாற்றம் அடைந்த நிலையில் அருவியில் விழுகின்ற ஆக்ரோஷமான தண்ணீரில் குளித்து மகிழலாம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.எதிர்பார்த்த அளவு தண்ணீர் வராததால் தடை விலக்கி கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    • திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் தற்போது மிதமான அளவில் தண்ணீர் கொட்டுகிறது.
    • அமாவாசை, பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் அமணலிங்கேஸ்வரர் கோயிலுக்கு பக்தர்கள் வருவார்கள்.

    உடுமலை:

    கடும் வெயில் காரணமாக திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந் து வருகின்றனர்.

    உடுலை அருகே உள்ள திருமூர்த்திமலையில் அமணலிங்கேஸ்வரர் கோயில், பஞ்சலிங்க அருவி, வண்ண மீன் காட்சியகம், நீச்சல்குளம், திருமூர்த்திமலை ஆகியவை உள்ளன. தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வருகின்றனர். அமாவாசை, பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் அமணலிங்கேஸ்வரர் கோயிலுக்கு பக்தர்கள் வருவார்கள்.

    தற்போது கோடை துவங்கியுள்ள நிலையில் வெயில் வாட்டி வதைக்கிறது. மேலும் 11,12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வும் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து சுற்றுலா தலங்களை நோக்கி மக்கள் படையெடுக்க துவங்கி விட்டனர். குறிப்பாக அருவி, ஆறு, குளம் உள்ள பகுதிகளுக்கு அதிகளவில் செல்கின்றனர்.

    திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் தற்போது மிதமான அளவில் தண்ணீர் கொட்டுகிறது. வெயிலுக்கு இதமாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர். உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து அருவியில் குளிக்கின்றனர்.

    இதேபோல் அமராவதி ஆறு பகுதிக்கும் ஏராள மானோர் செல்கின்றனர். ஆற்றில் தற்போது தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டு விட்டாலும் ஆங்காங்கே பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. குமரலிங்கம் பகுதியில் உள்ள அமராவதி ஆற்றில் தேங்கிய தண்ணீரில் உள்ளூர் மக்கள் நீராடி செல்கின்றனர்.  

    ×