என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Panchayat Secretary murder"

    உத்திரமேரூர் அருகே ஊராட்சி செயலாளர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது தம்பியை போலீசார் தேடி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள மருத்துவம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (45).

    இவர் அரசாணி மங்கலம் ஊராட்சியில் செயலாளராக பணி புரிந்து வந்தார். இவருடைய தம்பி ஏழுமலை (40). விவசாயி.

    வெங்கடேசனும், ஏழுமலையும் மருத்துவம் பாடியில் அருகருகே உள்ள வீட்டில் குடியிருந்து வந்தனர். வெங்கடேசன் வீட்டில் உள்ள கழிவுநீர் வெளியேறுவது தொடர்பாக அண்ணன்-தம்பி இருவருக்கும் தகராறு இருந்து வந்தது.

    இன்று காலை 8 மணி அளவில், இந்த பிரச்சினை தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த ஏழுமலை அரிவாளை எடுத்து வந்து அவருடைய அண்ணன் வெங்கடேசனை சரமாரியாக வெட்டினார்.

    படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்த வெங்கடேசனை உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.

    கொலையுண்ட வெங்கடேசன் உடல் மருத்துவ பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட வெங்கடேசனுக்கு அமுதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

    உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கொலையாளி ஏழுமலை தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். #tamilnews
    ×