search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Palace On Wheels Train"

    • டெல்லியில் இருந்து தொடங்கி வாரணாசி பிரயாக்ராஜ் வழியாக சென்று அயோத்தியில் முடிவடையும்.
    • ராஜஸ்தான் மாநிலத்தில் பயணித்து வந்த ரெயில், புதிய பாதையில் இயக்கப்பட உள்ளது.

    அயோத்தி:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோவில் கும்பாபிஷேகம் சமீபத்தில் நடந்தது. இக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள். பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் அயோத்தியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    இந்த நிலையில் அயோத்தி ரதம் இந்தியாவின் சொகுசு ரெயிலான பேலஸ் ஆன் வீல்ஸ் ரெயிலை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய ரெயில்வே மற்றும் ராஜஸ்தான் சுற்றுலா வளர்ச்சி கழகம் இணைந்து தொடங்கிய இந்த சொகுசு ரெயில் இணையற்ற விருந்தோம்பல், ஆடம்பர அறைகள், சுவாரசியமான பயணங்களுக்கு சர்வதேச அளவில் புகழ் பெற்றது. உலகளவில் முதல் 10 ஆடம்பரமான ரெயில் பயணங்களில் இதுவும் ஒன்று. இதனால் பேலஸ் ஆன் வீல்ஸ் சொகுசு ரெயில் பயணம் சுற்றுலாவுக்கு சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. அரண்மனையில் இருப்பது போன்ற உணர்வை தரும்.

    இந்த நிலையில் பேலஸ் ஆன் வீல்ஸ் ரெயிலில் இந்தியாவில் சில புனித நகரங்கள் வழியாக 6 நாள் புனித யாத்திரைக்கு பயணிகளை அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    டெல்லியில் இருந்து தொடங்கி வாரணாசி பிரயாக்ராஜ் வழியாக சென்று அயோத்தியில் முடிவடையும். ராஜஸ்தான் மாநிலத்தில் பயணித்து வந்த ரெயில், புதிய பாதையில் இயக்கப்பட உள்ளது.

    புனித யாத்திரையில் ரெயிலில் பிரத்யேகமாக சைவ உணவுகளே வழங்கப்படும். மதுபானங்கள் வழங்கப்பட மாட்டாது. மாதத்துக்கு 2 முறை புனித யாத்திரை சுற்றுலா ரெயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்காக ரெயில் ரூ.7 கோடியில் புதுப்பித்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. சொகுசு ரெயில் புனித யாத்திரை கட்டணம் ஒரு நபருக்கு லட்சக்கணக்கில் இருக்கும்.

    ×