search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Padma Priya"

    மலையாள பட உலகில் நடிகைகளுக்கு பாலியல் கொடுமை அதிகரித்து வருவதாக நடிகைகள் ரேவதி, பார்வதி, ரீமாகல்லிங்கல், பத்மபிரியா ஆகியோர் ஆவேசம் பேசியுள்ளார்கள். #MeToo
    கேரளாவில் பிரபல நடிகை ஒருவர் ஓடும் காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவரான திலீப் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தற்போது நடிகர் திலீப் ஜாமீனில் வெளி வந்துள்ளார்.

    இந்த சம்பவத்துக்கு பிறகு நடிகர் திலீப் மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’ வில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அப்போது நடிகர்சங்கத்தின் தலைவராக இன்னசென்ட் இருந்து வந்தார். அதன்பிறகு தனது உடல் நிலையை காரணம் காட்டி அவர் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

    அதன்பிறகு நடிகர் சங்க புதிய தலைவராக மோகன்லால் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் நடிகர் சங்க கூட்டத்தை கூட்டி நடிகர் திலீப்பை மீண்டும் சங்கத்தில் இணைத்தனர். இதற்கு பாதிக்கப்பட்ட நடிகையும், மேலும் நடிகைகள் ரீமாகல்லிங்கல், கீதுமோகன்தாஸ் உள்பட சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் தங்கள் உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தனர். இதனால் தன் மீதான குற்றச்சாட்டில் தான் நிரபராதி என்று நிரூபிக்கும் வரை நடிகர் சங்கத்தில் இணைய விரும்பவில்லை என்று திலீப் அறிவித்ததால் இந்த பிரச்சினை சற்று ஓய்ந்தது.

    தற்போது சில நடிகைகள் பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவித்து வரும் சூழ்நிலையில் மலையாள பட உலகை சேர்ந்த நடிகைகளும் இது தொடர்பாக ஆவேசமாக குற்றச்சாட்டுகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

    மலையாள பெண் சினிமா கலைஞர்கள் சங்கத்தை சேர்ந்த நடிகைகள் ரேவதி, பத்மபிரியா, பார்வதி, ரீமா கல்லிங்கல், ரம்யாநம்பீசன், அர்ச்சனா பத்மினி ஆகியோர் கொச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது மலையாள பட உலகில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகரித்துள்ளதாக அவர்கள் ஆவேசமாக குற்றம் சாட்டினார்கள்.



    நடிகை பார்வதி கூறும் போது, நடிகை கடத்தல் சம்பவத்தில் நடிகர் திலீப்பை காப்பாற்ற நடிகர் சங்கம் முயற்சி செய்தபோதே அவர்கள் மீதான நம்பிக்கை போய்விட்டது. தங்களுக்கு ஏற்பட்ட கெட்ட பெயரை மாற்ற அவர்கள் அவ்வப் போது நாடகம் நடத்துகிறார்கள். பாதிக்கப்பட்ட நடிகை பற்றி அவர்களுக்கு கவலை கிடையாது என்றார்.

    புள்ளிக்காரன் ஸ்டாரா என்ற படத்தில் நான் நடித்த போது அந்த படத்தின் தயாரிப்பு நிர்வாகியான ஷெரின் ஸ்டான்லி எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுபற்றி நான் மலையாள தொழில்நுட்ப கலைஞர்கள் சங்கத்தில் புகார் செய்தேன். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனக்கு பட வாய்ப்புகள் பறிபோனது தான் நடந்தது’ என்றார்.

    நடிகைகள் பேட்டியின் போது சரமாரியாக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி சுமார் 40 நிமிடம் ஆவேசமாக பேசினார்கள். நடிகை பார்வதி பேட்டி அளிக்கும் போது கண்ணீர்விட்டு கதறினார். அவரை சக நடிகைகள் ஆறுதல் கூறி தேற்றினார்கள். 
    நடிகை கடத்தல் வழக்கில் சிக்கி கைதாகி ஜாமீனில் வெளிவந்திருக்கும் திலீப்புக்கு எதிராக சில நடிகைகள் மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். #Dileep
    நடிகை கடத்தல் வழக்கில் சிக்கி கைதான திலீப்பை மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கினர். இப்போது அவர் ஜாமீனில் வெளிவந்து இருக்கிறார்.

    சமீபத்தில் நடந்த மலையாள நடிகர் சங்க தேர்தலில் புதிய தலைவராக தேர்வான மோகன்லால் நடிகர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி மீண்டும் திலீப்பை சங்கத்தில் சேர்த்தார்.

    இது மலையாள நடிகைகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மோகன்லால் நடவடிக்கையை கண்டித்து ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ், ரீமா கல்லிங்கல் ஆகியோர் நடிகர் சங்க உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். மேலும் பல நடிகைகள் குற்றவாளியை எப்படி சங்கத்தில் சேர்க்கலாம் என்று விமர்சித்து நடிகர் சங்கத்துக்கு கடிதங்கள் அனுப்பினார்கள். 

    எதிர்ப்பு காரணமாக மோகன்லால் பின் வாங்கினார். கோர்ட்டில் நிரபராதி என்று நிரூபிக்கும் வரை சங்கத்தில் இருந்து திலீப் தள்ளி இருப்பார் என்று அறிவித்தார். அதன்பிறகு அதிருப்தி நடிகைகளை அழைத்து சமரச பேச்சுவார்த்தையும் நடத்தினார். இதைத்தொடர்ந்து இந்த பிரச்சினை அடங்கி இருந்தது. 

    இந்த நிலையில் நடிகைகள் ரேவதி, பத்மபிரியா, பார்வதி ஆகியோர் மீண்டும் நடிகர் சங்கத்துக்கு எதிராக கிளம்பி இருக்கிறார்கள். மூவரும் இணைந்து நடிகர் சங்க தலைவர் மோகன்லாலுக்கு மேலும் ஒரு கடிதம் அனுப்பி உள்ளனர். அதில் ‘‘திலீப்பை மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்க்க ஏன் முடிவு எடுத்தீர்கள்? என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டு உள்ளனர்.

    இந்த கடிதம் மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×