என் மலர்
நீங்கள் தேடியது "ooty coonoor national highway road"
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள அருவங்காட்டை சேர்ந்தவர் நந்தகுமார். இவர் சின்னபிக்கட்டியை சேர்ந்த கங்காதரன் என்பவருக்கு சொந்தமான காரை ஓட்டிச் சென்றார்.
கார் ஊட்டி- குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் எல்லநள்ளி அருகே சென்ற போது காரின் முன் பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நந்தகுமார் காரை நடு ரோட்டில் நிறுத்தி விட்டு உடனடியாக வெளியேறினார்.
கண்இமைக்கும் நேரத்தில் கார் தீ பிடித்து எரிந்தது. தீ மளமளவென கார் முழுவதும் பரவியது. சிறிது நேரத்தில் கார் முழுவதும் எரிந்தது. கரும்புகை வந்த உடனே நந்தகுமார் வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதனால் அந்த ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த தகவல் கிடைத்ததும் கேத்தி போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து காரை நடுரோட்டில் இருந்து அப்புறபடுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இது குறித்து கேத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






