search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Online advertisement"

    • வள்ளியூர் அருகே உள்ள துலுக்கர்பட்டியை சேர்ந்தவர் மனோகரன்(வயது 63). இவர் யூ-டியூப்பில் வந்த காய்கறி விற்பனை செய்வது சம்பந்தமான விளம்பரத்தை பார்த்து அதில் உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.
    • மனோகரன் காய்கறி வியாபாரம் செய்வதற்காக ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் பணத்தை செலுத்தி ஏமாந்துள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள துலுக்கர்பட்டியை சேர்ந்தவர் மனோகரன்(வயது 63). இவர் யூ-டியூப்பில் வந்த காய்கறி விற்பனை செய்வது சம்பந்தமான விளம்பரத்தை பார்த்து அதில் உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.

    அதில் எதிர்புறம் பேசிய நபர் முன் தொகையாக பணம் செலுத்த கூறியுள்ளார். அதனை உண்மை என்று நம்பிய மனோகரன் காய்கறி வியாபாரம் செய்வதற்காக ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் பணத்தை செலுத்தி ஏமாந்துள்ளார்.

    அதேபோல் மூன்றடைப்பு அருகே உள்ள மல்லக்குளம் பகுதியை சேர்ந்த ஜேசுகுமார் என்பவர் முகநூலில் வந்த ஆன்லைன் முதலீடு தொடர்பான விளம்பரத்தை நம்பி அதில் உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு ரூ.20 ஆயிரம் பணத்தை கொடுத்து ஏமாந்துள்ளார்.

    இந்த சம்பவங்கள் தொடர்பாக மனோகரன் மற்றும் ஜேசுகுமார் ஆகிய இருவரும் பணத்தை மீட்டுத்தருமாறு நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு 2 பேரின் பணத்தையும் மீட்டனர்.

    வேண்டுகோள்

    மேலும் இதுபோன்று இணையவழி குற்றம் செய்பவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொதுமக்கள் இணையதளங்களில் தேவையில்லாத விளம்பரங்களை நம்பி பணத்தை இழக்க வேண்டாம் என்றும், சைபர் கிரைம் புகார்களுக்கு https://cybercrime.gov.in/ என்ற இணையதளத்திலோ அல்லது 1930 என்ற சைபர் கிரைம் தொலைபேசி எண்ணிலோ புகார் அளிக்க வேண்டும் என்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்..

    ×