search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "One more absconder arrested in"

    • விசாரணை நடத்தி தலைமறைவானவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
    • கண்ணன் என்பவரை மொடக்குறிச்சி போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    மொடக்குறிச்சி:

    தேனி மாவட்டம் உத்தம பாளையம் அடுத்த சின்ன ஓலாபுரம் பகுதியை சேர்ந்த பூசாரி கருப்பு மகன் சிவாஜி. விவசாயி. இவருக்கு உசிலம்பட்டியை சேர்ந்த பாண்டி என்பவர் தனது உறவினர் செந்தில் மூலம் அறிமுகமானார்.

    சிவாஜியிடம் பாண்டி ஈரோட்டில் எனக்கு தெரிந்தவரிடம் ரூ.35 லட்சம் பணம் கொடுத்தால் ரூ.50 லட்சம் 2000 ரூபாய் நோட்டுக்களை வழங்கு வதாக தெரிவித்துள்ளார்.

    இதனை நம்பிய சிவாஜி ரூ.35 லட்சத்துடன் உறவி னர்கள் செந்தில், மாதேஷ், குமார் மற்றும் டிரைவர் குபேந்திரன் ஆகியோருடன் லக்காபுரம் அருகே உள்ள பரிசல் துறைக்கு வந்தார்.

    இதையடுத்து ராஜ்குமார் 2 பேருடன் சிவாஜியை சந்தித்து பணம் தருவதாக கூறி தனது காரில் பெரு ந்துறை நோக்கி புறப்பட்டார். கார் சிறிது தூரம் சென்றவுடன் எதிரே மற்றொரு காரில் இருந்த 4 பேர் ராஜ்குமாரின் காரை வழிமறித்து அதிகாரிகள் என கூறி ரூ.35 லட்சத்துடன் 7 பேர் கொண்ட கும்பல் காரில் தப்பி சென்றனர்.

    இது குறித்து மொட க்குறிச்சி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து கரூர் மாவட்டம் மலைக்கோவி லூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். இதை தொடர்ந்து போலீஸ் போல் நடித்த நாமக்கல் மாவட்டம் போத்தனூர் பகுதியைச் சேர்ந்த மாதேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    இதையடுத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி தலைமறைவானவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கரூர் மாவட்டம் புதுப்பாளையம் மணமங்கலம் பகுதியில் பதுங்கி இருந்த கரூர் மாவட்டம் சக்தி நகர் பகுதி யை சேர்ந்த கண்ணன் (52) என்பவரை மொடக்குறிச்சி போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    மேலும் கண்ணனிடம் இருந்த நம்பர் பிளேட் இல்லாத ஒரு காரை போலீ சார் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தொடர்ந்து தலைமறைவான மற்ற வர்களை போலீசார் தீவிர மாக தேடி வருகின்றனர்.

    ×