என் மலர்
நீங்கள் தேடியது "Ondipudur"
கோவை:
கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 32). என்ஜினீயர். இவரது மனைவி பிரியலட்சுமி. சம்பவத்தன்று கார்த்திகேயன் தனது மனைவியை அழைத்துக்கொண்டு நெகமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். இன்று அதிகாலை திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடையந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த 7½ பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம் கொள்ளைபோனது தெரியவந்தது.
இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
சிங்காநல்லூர், அக்.15-
தர்மபுரியை சேர்ந்தவர் சேகர் (வயது 26). கட்டிடத்தொழிலாளி. இவரது மனைவி மாரி (20). சேகர் குடும்பத்துடன் கோவை ஒண்டிப்புதூர் ராமச்சந்திரன் லே-அவுட் பகுதியில் தங்கி வேலைக்கு சென்று வந்தார்.
இந்நிலையில் இன்று காலை மாரி எழுந்து பார்த்தபோது சேகர் தூக்கில் பிணமாக தொங்கினார். இது குறித்து சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது குடும்பத்தகராறு காரணமாக சேகர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் கூறினர்.






