search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nutririon"

    • தென்காசியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப் பணிகளின் சார்பாக ஊட்டச்சத்து மாதவிழா ஆய்க்குடி பகுதியில் உள்ள ஜே.பி. பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
    • வளர் இளம் பெண்களிடையே ஏற்படும் ரத்தசோகையை அகற்றிட தன் சுத்தம், யோகா போன்ற விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.

    தென்காசி:

    தென்காசியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப் பணிகளின் சார்பாக ஊட்டச்சத்து மாதவிழா ஆய்க்குடி பகுதியில் உள்ள ஜே.பி. பொறியியல் கல்லூரியில்நடைபெற்றது. இதில், வளர் இளம் பெண்களிடையே ஏற்படும் ரத்தசோகையை அகற்றிட தன் சுத்தம், யோகா போன்ற விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். இன்றைய நவீன காலத்திற்கு ஏற்றால் போல் மக்கள் துரித உணவுகளை விரும்பி உண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் கண் பார்வை குறைபாடு, ரத்த சோகை உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். இதனை தடுக்கும் விதமாக தமிழக அரசு சார்பில் ஊட்டச்சத்து மாத விழா என்ற பெயரில் பாரம்பரிய உணவு தானியங்களான கேழ்வரகு, கம்பு, ராகி, சோளம், திணை, குதிரைவாலி, உள்ளிட்ட தானியங்களை காட்சி படுத்தினர். அதே போன்று அங்கன்வாடி பணியாளர்கள் சார்பில் பாரம்பரிய தானியங்களினால் செய்யப்பட்ட உணவு வகைகள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது.இந்த உணவுகளை உண்பதால் ஏற்படும் நம்மைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

    இதில், கல்லூரி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ- மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×