என் மலர்

  நீங்கள் தேடியது "nurse killed"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலத்தில் நர்சு கொலை செய்யப்பட்டு கிணற்றில் பிணமாக கிடந்தார். அவர் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  சேலம்:

  சேலம், மணக்காடு, பிள்ளையார்நகர் முதல் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் பெருமாள் (வயது 50). இவரது மகள் விசாலி (வயது 22). இவர் கந்தம்பட்டி பைபாஸ் அருகே உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2 ஆண்டு கள் நர்சிங் படிப்பு படித்து வந்தார்.

  இந்த படிப்பை பாதியில் நிறுத்திய விசாலி வீட்டில் இருந்து வந்தார். கடந்த 15 -ந் தேதி அவருக்கு உடலை நிலை சரியில்லாமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் பெற்றோர், விசாலியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து பார்த்தனர். ஆனால், அவர் வர மறுத்து விட்டார்.

  நேற்று முன்தினம் விசாலி வீட்டில் இருந்து மாயமானார். பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

  இந்த நிலையில், ஜான்சன்பேட்டை, ராஜா நகரில் உள்ள ஒரு வீட்டின் அருகே உள்ள கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியது. இது குறித்து அப்பகுதி மக்கள் அஸ்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

  இதையடுத்து அஸ்தம்பட்டி போலீசாரும், தீயணைப்பு நிலைய வீரர்களும் சம்பவ இடத்திற்கு சென்று, கிணற்றில் பிணமாக மிதந்த பெண் உடலை கயிறு கட்டி மேலே கொண்டு வந்தனர். பிணமாக கிடந்த அந்த பெண் மாயமான நர்சு விசாலி என்பது தெரியவந்தது. விசாலி உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  விசாலி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டின் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்ததில் அவருக்கு தலையில் அடிப்பட்டது. இதற்காக அவர், ஆஸ்பத்திரியில் சிகிச்சைப் பெற்று வந்தார். சில நேரங்களில் ஆவேசமாகவும் வீட்டில் பேசி வந்தார்.

  இதனால் வீடு மாறினால் எல்லாம் சரியாகி விடும் என்று கருதி பெற்றோர், கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராஜாநகரில் உள்ள ஒரு வாடகை வீட்டை பார்த்து, அதில் குடியேற இருந்தனர். இந்த வீட்டின் அருகே உள்ள கிணற்றில் இருந்து தான் விசாலி இன்று காலை பிணமாக மீட்கப்பட்டார்.

  விசாலி இந்த வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். நேற்று முன்தினம் பிள்ளையார் நகரில் உள்ள வீட்டில் யாரும் இல்லாதபோது ராஜாநகரில் உள்ள வீட்டிற்கு விசாலி சென்றுள்ளார். அங்கு வைத்து அவரை யாராவது கற்பழித்து கொலை செய்து கிணற்றில் வீசினார்களா? அல்லது கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பன போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ×