search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nobel World Record"

    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.
    • மாணவ-மாணவிகளுக்கு பதக்கங்களும், சான்றி தழ்களும் வழங்கப்பட்டன.

    திருப்பூர்:

    திருப்பூர் இடுவம்பாளை யம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பல்வேறு சிலம்பாட்ட கழகங்கள் சார்பில், நோபல் உலக சாதனை முயற்சிக்காக 235 பள்ளி மாணவ&மாணவிகள் தொடர்ச்சியாக 5 மணி நேரம், இடைவெளியின்றி சிலம்பம் சுற்றினர்.

    இதில் திருப்பூர், சேலம், விருதுநகர் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

    மேலும், மாணவ-மாணவிகளின் பெற்றோர்க ளும் அவர்களை உற்சாகப்ப டுத்தினர். நோபல் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம்பிடிப்பதற்காக இந்த நிகழ்ச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் கலந்துகொண்ட மாணவ-மாணவிகளுக்கு பதக்கங்களும், சான்றி தழ்களும் வழங்கப்பட்டன.

    • சிறுவயது முதலே பார்த்ததை செய்யும் திறன் அதிகம் இருந்ததை உணர்ந்த பெற்றோர் புதிர் அட்டைகளை இணைக்கும் பயிற்சியை முறையாக வழங்கினர்.
    • நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் சார்பாக சிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    சுவாமிமலை:

    மயிலாடுதுறையை சேர்ந்த கல்யாண்குமார், உமாமகேஸ்வரி தம்பதியனரின் 5 வயது மகன் சாய் மித்ரன். இவர் தஞ்சை மாவட்டம் திருபுவனம் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் யு.கே.ஜி. படித்து வருகிறார்.

    சிறுவயது முதலே பார்த்ததை செய்யும் திறன் அதிகம் இருந்ததை உணர்ந்த பெற்றோர் புதிர் அட்டைகளை இணைக்கும் பயிற்சியை முறையாக வழங்கினர். இதனை அடுத்து நோபல் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் சார்பில் திருபுவனம் மகரிஷி வித்யா பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் 30 நிமிடங்களில் 300 புதிர் அட்டைகளை இணைக்க வேண்டும் என நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் மாணவன் சாய் மித்திரன் 29.5 நிமிடங்களில் 350 புதிர் அட்டைகளை இணைத்து நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் செய்துள்ளார்.

    அவருக்கு நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் சார்பாக சிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் இது போன்ற மாணவர்களின் திறனை மேம்படுத்த தங்களது பள்ளி முழு ஒத்துழைப்பு நல்கும் என பள்ளியின் நிர்வாகிகள் கூறினர்.

    ×