search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "new mps"

    பாராளுமன்ற தேர்தலில் தேர்வு செய்யப்படும் புதிய எம்.பி.க்கள் டெல்லியில் இனி ஓட்டல்களில் தங்கவைக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ஏழு கட்டமாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் புதிய எம்.பி.க்கள், வழக்கமாக டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைப்படுவார்கள். இதனால் அரசுக்கு செலவு ஏற்படுத்துவதாக விமர்சனம் எழுந்தது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் தேர்வு செய்யப்படும் புதிய எம்.பி.க்கள் டெல்லியில் இனி ஓட்டல்களில் தங்கவைக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, மக்களவை செயலாளர் சினேகலதா ஸ்ரீவஸ்தவா கூறுகையில், புதிய எம்.பி.க்கள் ஓட்டல்களில் தங்க வைக்கப்பட மாட்டார்கள். அவர்கள் வெஸ்டர்ன் கோர்ட் கட்டிடம், புதிதாக கட்டப்பட்ட அதன் இணைப்பு கட்டிடம், பல்வேறு மாநில பவன்கள் ஆகியவற்றில் தங்க வைக்கப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

    மக்களவை சபாநாயகரான சுமித்ரா மகாஜன், தேர்தல் அறிவிப்பு வெளியாகும் போதே இவ்விவகாரத்தில் நடவடிக்கையை தொடங்கிவிட்டார். புதிய எம்.பி.க்களை நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைக்கக்கூடாது, அவர்களை அரசு கட்டிடங்களில் தங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மக்களவை செயலாளருக்கு உத்தரவிட்டார். அதன்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    ×