என் மலர்
நீங்கள் தேடியது "New ironing board"
- நாகப்பட்டினத்தைச் சார்ந்த சலவைத் தொழிலாளிக்கு பித்தளையால் ஆன புதிய இஸ்திரி வழங்கப்பட்டது.
- அயன்பாக்ஸ் வாங்க நிதி உதவி செய்த அனைவருக்கும் நன்றிகளை எம்.என்.கே. டிரஸ்ட் சார்பாக அதனுடைய நிறுவனத் தலைவர் தெரிவித்துக் கொண்டார்.
நாகப்பட்டினம்:
மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின் சார்பாக ஏழ்மை நிலையில் வாழ்ந்து வரும் நாகப்பட்டினத்தைச் சார்ந்த சலவைத் தொழிலாளிக்கு பித்தளையால் ஆன புதிய இஸ்திரி பெட்டி நேற்று அவரது வீட்டிற்கு சென்று வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்ட ளையின் நிறுவனத் தலைவர் சம்பத்குமார் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் மாநில நிர்வாகிகள் சாக்ரடீஸ், நாகூர் நகர ஒருங்கிணைப்பாளர் நாகைமணி கலந்து கொண்டனர்.
மேலும் சிறப்பு விருந்தினராக ஓம்முருகா டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் ஆனந்தன் மற்றும் அயன்பாக்ஸ் வாங்க நிதி உதவி செய்த அனைவருக்கும் நன்றிகளை எம்.என்.கே. டிரஸ்ட் சார்பாக அதனுடைய நிறுவனத் தலைவர் தெரிவித்துக் கொண்டார்.






