search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nellai-Tenkasi buses"

    • நெல்லை மாநகர பகுதி மக்கள் தொகை பெருக்கம், வணிக வளாகங்கள், வாகனங்களின் போக்குவரத்து அதிகரிப்பு காரணமாக பெரும்பாலான இடங்களில் கடும் போக்குவரத்து நெருக்கடி இருந்து வருகிறது.
    • இதனை சரி செய்யும் விதமாக மாநகர பகுதியில் போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகள் அகலப்படுத்தப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இங்கு மக்கள் தொகை பெருக்கம், வணிக வளாகங்கள், வாகனங்களின் போக்குவரத்து அதிகரிப்பு காரணமாக பெரும்பாலான இடங்களில் கடும் போக்குவரத்து நெருக்கடி இருந்து வருகிறது.

    இதனை சரி செய்யும் விதமாக மாநகர பகுதியில் போக்குவரத்து அதிகம் உள்ள சாலையான டவுன்-குற்றாலம் சாலை, எஸ்.என். ஹைரோடு, வண்ணார்பேட்டை புறவழிச்சாலை, மத்திய சிறை வழியாக செல்லும் திருவனந்தபுரம் சாலை உள்ளிட்ட சாலை களை அகலப்படுத்தப்பட்டு வருகிறது.

    இதில் ஒரு பகுதியாக பழைய பேட்டை சோதனை சாவடியில் இருந்து டவுன் தொண்டர் சன்னதி வரையிலும் ஒடுக்கமாகவும், சேதமடைந்தும் காணப்பட்ட சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் நெடுஞ் சாலைத்துறை தற்போது பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக கண்டியப்பேரி முக்கு முதல் தொண்டர் சன்னதி வரை யிலும் சாலைகள் புதுப்பிக்கப்பட்டு விட்டது.

    தொடர்ந்து கண்டியப்பேரி வளைவு பகுதியில் உள்ள பழைய பாலம் சிறிய அளவில் இருப்பதால் அந்த பகுதியில் விபத்துக்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே அதனை யும் அகலப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அந்த பாலம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு புதிதாக காலம் கட்டும் பணி அங்கு நடைபெற்று வரு கிறது.

    இதனால் அந்த பகுதி வழியாக சிறிய ரக வாக னங்கள் மட்டும் செல்வதற்கு தற்காலிக சாலை அமைக்கப் பட்டுள்ளது. அதே நேரத்தில் நெல்லையில் இருந்து தென்காசி மார்க்கமாக செல்லும் பஸ்கள் காட்சி மண்டபத்தில் இருந்து கோடீஸ்வரன் நகர், புதுப்பேட்டை பஸ் நிறுத்தம் வழியாக சென்று பழைய பேட்டை சோதனை சாவடி வழியாக தென்காசி நான்கு வழி சாலையில் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    கடந்த 10 நாட்களாக இந்த வழியாக பஸ்கள் இயங்கி வரும் நிலையில் எந்த விதமான அரசு அறிவிப்பும் இன்றி கூடுதல் கட்டணமாக ரூ.3 வசூல் செய்யப்படுகிறது. இதேபோல் மறுமார்க்கமாக தென்காசியில் இருந்து நெல்லைக்கு வரும் அரசு பஸ்களிலும் கூடுதல் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    தென்காசியில் இருந்து நெல்லைக்கு ரூ.32 கட்டண மாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.35 வசூலிக்கப்படுகிறது.

    இதுகுறித்து கண்டக்டரிடம் பயணிகள் கேட்கும் போது, அவர்கள் போக்கு வரத்து கழக உத்தரவு என்று கூறிவிட்டு டிக்கெட்டை வசூல் செய்து விடுகின்றனர். இது தொடர்பாக சில பயணிகள் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் சம்பவங்கள் அடிக்கடி தென்காசி செல்லும் பஸ்களில் நடக்கிறது.

    ஆனாலும் பஸ்கள் வழக்கமான பாதையை பயன்படுத்தாமல், மாற்றுப்பாதையில் சுற்றி செல்வதால் டீசல் செலவை ஈடுகட்டும் வகையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறுகின்றனர்.

    இதனால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    ×