search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nellai-Kollam"

    • மீட்டர் கேஜ் ரயில்கள் ஓடிய நேரத்தில் நெல்லை - கொல்லம் இடையே பகல்நேர ரயில்கள் இயக்கப்பட்டன.
    • 2018-ம் ஆண்டு பிராட் கேஜ் ஆன பிறகு இந்த ரயில்கள் இயக்கப்படவில்லை.

    நெல்லை:

    தமிழகத்தில் மீட்டர் கேஜ் ெரயில்கள் ஓடிய நேரத்தில் நெல்லை - கொல்லம் இடையே அம்பை, பாவூர்சத்திரம், தென்காசி, செங்கோட்டை, ஆரியங்காவு, தென்மலை, புனலூர், கொட்டாரக்கரை வழியாக பகல்நேர ெரயில்கள் இயக்கப்பட்டன.

    இப்பாதை 2018-ம் ஆண்டு பிராட் கேஜ் ஆன பிறகு இந்த ெரயில்கள் இயக்கப்படவில்லை.இதனால் நெல்லைக்கு மருத்துவ சிகிச்சைக்காக வரும் கேரள மக்கள், இரு மாநில மாணவர்கள், வணிகர்கள் தனியார் மற்றும் அரசு வங்கி ஊழியர்கள், பால் மற்றும் காய்கறி விற்பனையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.


    மேலும் குற்றாலம் அருவிகள், குண்டாறு, அடவிநயினார், பாபநாசம், மணிமுத்தாறு அணைகள், மாஞ்சோலை எஸ்டேட், அகத்தியர் அருவி, ஆரியங்காவு, பாலருவி, தென்மலை சுற்றுலா தலம், கல்லடா அணை, அம்பநாடு எஸ்டேட் ஆகிய இடங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளும் இந்த ெரயில்களால் பயன் பெறுவர்.


    எனவே இந்த ெரயில்களை விரைவில் இயக்கிட ஆணை பிறப்பிக்க வேண்டும் எனவும், அந்த ரெயில்களில் மேற்கு தொடர்ச்சி மலைகளின் இயற்கை காட்சிகளை கண்டு ரசித்திட மேற் கண்ணாடி கூரை வசதி உள்ள விஸ்டாடோம் பெட்டி ஒன்று இணைக்க வேண்டும் எனவும் செங்கோட்டை பயணிகள் நலச்சங்கத்தினர் மத்திய ெரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு மனு அனுப்பி உள்ளனர்.

    ×