என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Neithal Vizha"

    • மைதானத்தில் உணவுத் திருவிழா, புத்தக கண்காட்சி, கைவினைப்பொருட்கள் கண்காட்சி போன்றவையும் நடைபெற்று வருகிறது.
    • தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி மண்சார்ந்த கலைஞர்களின் கலை வாழ்க்கை முறையினையும் சிறப்புகளையும் அறிந்திடும் வகையில் நடைபெறும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் ஸ்பிக் நிறுவனம் இணைந்து நடத்தும் நெய்தல் கலை திருவிழா தூத்துக்குடி வஉசி கல்லூரி மைதானத்தில் கடந்த 7-ந் தேதி தொடங்கி 10 -ம் தேதி வரை மாலை 4.30,மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை நடைபெறுகிறது.

    விழாவில் பாரம்பரியமிக்க மண் சார்ந்த கலைஞர்கள் தங்கள் குழுவினருடன் பங்கேற்று தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    தமிழகம் முழுவதும் இருந்து வந்துள்ள 300-க்கும் மேற்பட்ட நடனம், நாட்டியம், தெருக்கூத்துக் கலைஞர்கள், பாரம்பரிய இசை வாத்தியம் இசைப்பவர்கள், வில்லுப்பாட்டு கரகாட்டக் குழுவினர் பங்கேற்று வருகின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்டத்தின் தலைநகரான நமது மாநகரில் நெய்தல் கலைவிழா நடைபெறுவது நமக்கு கிடைத்துள்ள பெருமையாகும். விழா மைதானத்தில் உணவுத் திருவிழா, புத்தகக் கண்காட்சி, கைவினைப்பொருட்கள் கண்காட்சி, போன்றவையும் நடைபெற்று வருகிறது.

    இதற்காக பிரத்யேகமாக 20 ஸ்டால்கள் அமைக்கப்பட்டு விழாவுக்கு வரும் மாணவ -மாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தும் வகையில் சத்தான உணவுகள் நவதானிய உணவுகள் ஆம்பூர் பிரியாணி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    இன்று மாலை தொடங்கும் நெய்தல் விழா அதிகாலை 2 மணி வரை வில்லுப்பாட்டு, பறையாட்டம், சிலம்பாட்டம், துடுப்பாட்டம், கரகாட்டம், தெருக்கூத்து, குச்சி ஆட்டம், கண்ணப்பத்தம்பிரான் கூத்து நிகழ்ச்சி என தொடர்ந்து விடிய விடிய நடைபெறுகிறது.

    இந்த நெய்தல் கலைவிழாசிறப்பையும் தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி மண்சார்ந்த கலைஞர்களின் கலை வாழ்க்கை முறையினையும் சிறப்புகளையும் அறிந்திடும் வகையில் நடைபெறும்.

    விழாவில் பொதுமக்கள் அனைவரும் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று இவ்வாறு அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

    ×