search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NCC Training"

    • என்.ஐ.டி. வளாகத்தில், மாவட்ட என்.சி.சி. யூனிட் சார்பில், வருடாந்திர பயிற்சி முகாம் தொடங்கியது.
    • மாணவர்கள் 60 பேர், மாணவிகள் 42 என, 102 பேரும் என மொத்தம் 250 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திருவேட்டக்குடியில் இயங்கி வரும் என்.ஐ.டி. வளாகத்தில், மாவட்ட என்.சி.சி. யூனிட் சார்பில், வருடாந்திர பயிற்சி முகாம் தொடங்கியது. முகாமை, முகாம் கமாண்டர் லலித் குமார் ஜோஷி துவக்கி வைத்தார். 10 நாட்கள் நடைபெறும் இம்முகாமில், பள்ளிகளைச்சேர்ந்த மாணவர்கள் 118 பேரும், மாணவிகள் 30பேரும், என 148 பேரும், கல்லூரிகளை ச்சேர்ந்த மாணவர்கள் 60 பேர், மாணவிகள் 42 என, 102 பேரும் என மொத்தம் 250 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.

    மேலும், ஒரு முதுநிலை என்.சி.சி. அதிகாரி, ஒரு பெண் பயிற்றுனர் உட்பட 6 ராணுவ பயிற்றுனர்கள் மற்றும் நான்கு என்.சி.சி. அதிகாரிகள் இந்த முகாமை வழி நடத்து கின்றனர். பயிற்சி முகாமில், ராணுவம் சம்பந்தப்பட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படும். குறிப்பாக, துப்பாக்கிகளை கையாளுதல், துப்பாக்கிச் சுடுதல், நில வரைபடங்கள் வரைபடத்தில் இருக்கக் கூடிய பொருள்களின் தூரங்களை கணக்கிட்டு நகர்தல், இராணுவ நடை பயிற்சி, ராணுவக் கட்டளைகள் போன்ற முக்கியமான பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது.

    தொடர்ந்து ஒவ்வொரு நாளும், பொது அறிவு வகுப்புகள், சுய சுத்தம் மற்றும் ஒழுக்கம், சாலை விழிப்புணர்வு, சமூக சேவை மற்றும் பங்களிப்பு, இந்திய அரசியலமைப்பு போன்ற விழிப்புணர்வு வகுப்புகளும், மாலையில் விளையாட்டு பயிற்சியும் இரவில் கலை நிகழ்ச்சி களும் இந்த 10 நாள் பயிற்சி முகாமில் நடைபெறும் என்று என்.சி.சி. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×