search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nazareth-Madurai bus"

    • நாசரேத்தில் மாலை 5. 20 மணிக்கு புறப்பட்டு கடைய னோடை, குரங்கணி, ஏரல், முக்காணி, தூத்துக்குடி வழியாக மதுரை வரை ஓடிய தடம் எண் 553 என்.எக்ஸ். 1 என்ற அரசு பஸ் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.
    • இந்த பஸ்சை நம்பி பயணம் செய்யும் கடையனோடை, குரங்கணி பகுதி மாணவ-மாணவிகள், கர்ப்பிணி பெண்கள் முதியோர் என பல்வேறு தரப்பினரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

    நாசரேத்:

    நாசரேத்தில் மாலை 5. 20 மணிக்கு புறப்பட்டு கடைய னோடை, குரங்கணி, ஏரல், முக்காணி, தூத்துக்குடி வழியாக மதுரை வரை ஓடிய தடம் எண் 553 என்.எக்ஸ். 1 என்ற அரசு பஸ் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.

    இந்த பஸ்சை நம்பி பயணம் செய்யும் கடையனோடை, குரங்கணி பகுதி மாணவ-மாணவிகள், கர்ப்பிணி பெண்கள் முதியோர் என பல்வேறு தரப்பினரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

    நாசரேத்தில் இருந்து மாலை 3.40-க்கு ஒரு தனி யார் பஸ் இந்த வழித் தடத்தில் புறப்படுகிறது. அதன் பின்னர் 5.20க்கு இந்த அரசு பேருந்து புறப்படும். அதன் பின்னர் இரவு 7.30 மணிக்கு மீண்டும் இந்த தனியார் பஸ் இதே வழித்தடத்தில் புறப் பட்டு தூத்துக்குடி செல்லும்

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக அரசு பஸ் ஓடாத தால் மாலை பள்ளி, கல் லூரி சென்று ஊர் திரும்பும் மாணவ-மாணவிகள்இரவு 7.30மணி வரை நாசரேத் பஸ் நிலையத்தில் காத்துக் கிடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த விவகாரத்தில் அதிகாரிகள் தலையிட்டு நிறுத்தப்பட்ட இந்த பஸ்சையும் மற்றும் பல கிராமப் பகுதி பஸ்களையும் உடனடியாக இயக்க நடவடிக்கையை எடுக்க வேண்டும் என பொதுமக் கள் மாணவ-மாணவிகள் மற்றும் கடையனோடை குரங்கணி ஊர் பொதுமக் கள் சார்பாக தமிழக முதல்-அமைச்சருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

    ×