search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Naxals Surrendered"

    சத்தீஸ்கர் மாநிலத்தில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த 62 மாவோயிஸ்டுகள் போலீசில் சரண் அடைந்தனர். #Naxals #Surrendered
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் வன்முறை தாக்குதல்கள் மற்றும் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் மாவோயிஸ்டுகளை ஒடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேசமயம் பயங்கரவாதப் பாதையில் இருந்து திரும்பி திருந்தி வாழ விரும்பும் மாவோயிஸ்டுகளுக்கு, புனர்வாழ்வு பணிகளுக்கான ஏற்பாடுகளையும் அரசு செய்து கொடுக்கிறது.

    மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை ஒப்படைத்து சரண் அடைந்தால் அவர்கள் திருந்தி வாழ வாய்ப்பு வழங்கப்படும் என்று காவல்துறை தொடர்ந்து அறிவிப்பு வெளியிட்டு வருகிறது.

    இந்நிலையில் பஸ்தார் பிராந்தியம் நாராயண்பூர் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்டுகள் 62 பேர் நேற்று போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். இவர்கள் அனைவரும் கடந்த 9 ஆண்டுகளாக ஜன்தனா சர்கார் என்ற மாவோயிஸ்ட் அமைப்பின்கீழ் செயல்பட்டு வந்தவர்கள் என்றும், அவர்களில் 55 பேர் ஆயுதங்களை ஒப்படைத்து சரண் அடைந்ததாகவும் ஐஜி விவேகானந்த் சின்கா தெரிவித்துள்ளார்.



    இந்த அளவுக்கு மாவோயிஸ்டுகள் சரண் அடைந்திருப்பது மிகப்பெரிய சாதனை என்றும், இது அரசின் சரண்டர் கொள்கைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி பெற்றும் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மாநில முதல்வர், டிஜிபி மற்றும் காவல்துறையினருக்கு பாராட்டும் தெரிவித்துள்ளார்.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் வரும் 12ம் தேதி மற்றும் 20-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.  #Naxals #Surrendered
    ×