என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National Statistics Day"

    • புள்ளியியல் நிபுணர் பேராசிரியர். பி.சி. மஹாலனோபிஸின் பிறந்த நாளான இன்று ஊக்குவிக்கவும் நாடு முழுவதும் தேசிய புள்ளியியல் தினத்தைக் கொண்டாடுகிறது.
    • சேலம் மற்றும் தர்மபுரி துணை மண்டல அலுவலக புள்ளியியல் துறை ஊழியர்கள் மேலும் புள்ளியியல் துறை கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    சேலம்:

    புள்ளியியல் நிபுணர் பேராசிரியர். பி.சி. மஹாலனோபிஸின் பிறந்த நாளான இன்று(ஜூன் 29-ந்தேதி) புள்ளிவிவரங்கள் குறித்த மக்களின் விழிப்புணர்வை அதிகரிக்கவும், அவற்றைப் பயன்படுத்த அவர்களை ஊக்குவிக்கவும் நாடு முழுவதும் தேசிய புள்ளியியல் தினத்தைக் கொண்டாடுகிறது.

    இந்த ஆண்டு "நிலையான வளர்ச்சி இலக்குகளை கண்காணிப்பதற்கான தேசிய கட்டமைப்புடன் மாநில கட்டமைப்பை சீரமைத்தல் என்பது குறித்து கோவை மண்டல இயக்குனர் விபீஷ் ஆலோசனையின்படி,

    சேலம் சொர்ணபுரியில் உள்ள தேசிய புள்ளியியல் துணை மண்டல அலுவலகம் சார்பில், தேசிய புள்ளியியல் தினம் கொண்டாடப்பட்டது.

    சேலம் புள்ளியியல் அலுவலர் அர்ஜுனன் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில் சேலம் மற்றும் தர்மபுரி துணை மண்டல அலுவலக புள்ளியியல் துறை ஊழியர்கள் மேலும் புள்ளியியல் துறை கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    சாரதா மகளிர் கல்லூரியின் புள்ளியியல் துறை உதவிப் பேராசிரியை டாக்டர்.வி.நிர்மலா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். தருமபுரி துணை மண்டல அலுவலக மூத்த புள்ளியியல் அதிகாரி சின்னதுரை உள்பட் அபலர் கலந்துகொண்டார்கள்.

    ×