என் மலர்
நீங்கள் தேடியது "National Start Up Award"
- இந்திய அரசு வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் தொழில்துறை மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை தேசிய ஸ்டார்ட் அப் விருதுகளை 2020-ல் அறிமுகம் செய்தது.
- தேசிய ஸ்டார்ட் அப் விருது கள் 2023-க்கான விண்ணப் பங்கள் கடந்த ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முதல் பெறப்பட்ட நிலையில் அதை சமர்ப்பிப்ப தற்கான கடைசி நாள் ஜூன் மாதம் 15 -ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சேலம்:
இந்திய அரசு வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் தொழில்துறை மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை தேசிய ஸ்டார்ட் அப் விருதுகளை 2020-ல் அறிமுகம் செய்தது. தேசிய ஸ்டார்ட் அப் விருது கள் 2023-க்கான விண்ணப் பங்கள் கடந்த ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முதல் பெறப்பட்ட நிலையில் அதை சமர்ப்பிப்ப தற்கான கடைசி நாள் ஜூன் மாதம் 15 -ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொழில்துறை மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை ஸ்டார்ட் அப் விருதுகளைப் பெறுவோருக்கு தலா ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு அளிக்கவுள்ளது. தேசிய ஸ்டார்ட் அப் விருதுகள் 2023-ல் இறுதிச் சுற்றில் பங்கேற்றவர்கள் மற்றும் வெற்றியாளர்கள் ஆகியோர் முதலீட்டாளர்கள் மற்றும் அரசு கட்டமைப்புகளை அணுகுதல், ஆலோசனை நிகழ்ச்சிகள், சர்வதேச சந்தை வாய்ப்புகள், ெபரு நிறுவனங்களுடனான தொடர்பு ஆகிய பயன்களைப் பெறுவார்கள். ஆர்வமுடையவர்கள் தேசிய ஸ்டார்ட்அப் விருதுகளுக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களது விண்ணப்பங்களை அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் புதிய தொழில் முனைவோர்கள் பலர் உள்ளனர். தற்போது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி நீட்டிக்கப்பட்டதன் மூலம் துடிப்பான தொழில்முனைவோர் தங்களது புதுமை கண்டுபிடிப்புகள் தீர்வுகளை எடுத்துக் காட்டுவதற்கு இந்த கூடுதல் கால அவகாசம் உதவியாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.






