என் மலர்
நீங்கள் தேடியது "National Ranking Badminton"
தேசிய ரேங்கிங் பேட்மிண்டன் போட்டியின் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான ஒற்றையர் பிரிவில் சென்னை வீரர் சங்கர் முத்துசாமி சாம்பியன் பட்டம் பெற்றார்.
தேசிய ரேங்கிங் பேட்மிண்டன் போட்டி சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடந்தது. இதில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான ஒற்றையர் பிரிவில் சென்னை வீரர் சங்கர் முத்துசாமி சாம்பியன் பட்டம் பெற்றார். அவர் இறுதிப்போட்டியில் 21-16, 21-6 என்ற நேர் செட் கணக்கில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த அன்கிட் மோண்டலை வீழ்த்தினார்.
சங்கர் 15 வயது பிரிவில் 4-வது முறையாக பட்டம் வென்று முத்திரை பதித்துள்ளார். 13 வயது பிரிவில் 2 முறை பட்டம் பெற்றுள்ளார். கடந்த மாதம் மியான்மரில் நடந்த ஆசிய ஜூனியர் போட்டியில் 15 வயதுக்குட்பட்ட பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்து இருந்தார்.
வேலம்மாள் பயர்பால் அகாடமியில் பயிற்சியாளர் அரவிந்தனிடம் அவர் பயிற்சி பெற்று வருகிறார். #tamilnews

15 வயது மற்றும் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான தேசிய ரேங்கிங் பேட்மின்டன் போட்டியில் தமிழக வீரர் சங்கர் முத்துசாமி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். #sankarmuthusamy #badminton #champion
சென்னை:
15 வயது மற்றும் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான தேசிய ரேங்கிங் பேட்மின்டன் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இதில் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான இறுதிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த சங்கர் முத்துசாமி 21-18, 21-11 என்ற நேர்செட்டுகளில் முதல்நிலை வீரரான பிரணவ் ராவ் காந்தமை (தெலுங்கானா) தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.
தேசிய ரேங்கிங் போட்டியில் சங்கர் 3-வது முறையாக தங்கம் வென்றுள்ளார். இதன்மூலம் ஆசிய போட்டிக்கான இந்திய அணிக்கு தேர்வாகி உள்ளார். சங்கர் முகப்பேரில் உள்ள பயர்பால் அகாடமியில் பயிற்ச்சியாளர் அரவிந்தனிடம் பயிற்சி பெற்று வருகிறார். #sankarmuthusamy #badminton #champion