என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை வீரர் சங்கர்"

    தேசிய ரேங்கிங் பேட்மிண்டன் போட்டியின் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான ஒற்றையர் பிரிவில் சென்னை வீரர் சங்கர் முத்துசாமி சாம்பியன் பட்டம் பெற்றார்.
    தேசிய ரேங்கிங் பேட்மிண்டன் போட்டி சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடந்தது. இதில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான ஒற்றையர் பிரிவில் சென்னை வீரர் சங்கர் முத்துசாமி சாம்பியன் பட்டம் பெற்றார். அவர் இறுதிப்போட்டியில் 21-16, 21-6 என்ற நேர் செட் கணக்கில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த அன்கிட் மோண்டலை வீழ்த்தினார்.

    சங்கர் 15 வயது பிரிவில் 4-வது முறையாக பட்டம் வென்று முத்திரை பதித்துள்ளார். 13 வயது பிரிவில் 2 முறை பட்டம் பெற்றுள்ளார். கடந்த மாதம் மியான்மரில் நடந்த ஆசிய ஜூனியர் போட்டியில் 15 வயதுக்குட்பட்ட பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்து இருந்தார்.

    வேலம்மாள் பயர்பால் அகாடமியில் பயிற்சியாளர் அரவிந்தனிடம் அவர் பயிற்சி பெற்று வருகிறார். #tamilnews
    ×