search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National Health Mission"

    • "ஜன் ஆரோக்கிய கேந்திரம்" செலவினங்களில் 60 சதவீதம் மத்திய அரசின் பங்களிப்பு
    • டயாலிசிஸ் சிகிச்சைக்கு மட்டுமே ரூ.7 கோடி நிலுவையில் உள்ளதாக வீணா தெரிவித்தார்

    நாடு முழுவதும் தேசிய சுகாதார இயக்க திட்டத்தின்படி அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையங்கள் மத்திய அரசின் நிதியாலும் மாநில அரசின் நிதியாலும் கூட்டாக இயங்கி வருபவை.

    கேரளாவில் "ஜன் ஆரோக்கிய கேந்திரம்" என செயல்படும் இம்மையங்களின் செலவினங்களில் 60 சதவீதத்தை மத்திய அரசும், 40 சதவீதத்தை மாநில அரசும் பகிர்ந்து கொள்கின்றன.

    இந்நிலையில், இந்த மருத்துவ மையங்களை "ஆயுஷ்மான் ஆரோக்ய மந்திர்" என பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசாங்கம் வற்புறுத்துவதாகவும், அதனை கேரள அரசு மறுப்பதால், தர வேண்டிய நிதியை தர மறுப்பதாகவும் கேரள சுகாதார துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:

    முதலில் நிதியை நிறுத்தி வைத்து தர மறுத்தனர். பிறகு மத்திய அரசின் பங்களிப்பை உறுதி செய்யும் விதமாக இம்மையங்களில் பெயர் பலகைகள் இடம் பெற வேண்டும் என்றனர்.

    ஆனால், தற்போது நிதியை கேட்டால், பெயரை "ஆயுஷ்மான் ஆரோக்ய மந்திர்" என மாற்ற சொல்லி வற்புறுத்துகின்றனர்.

    நிதி இல்லாததால் அனைத்து சுகாதார பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏழை நோயாளிகள் பெரிதும் பாதிப்படைகின்றனர்.

    அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சிகிச்சைகள் கிடைப்பது கடினமாகிறது.

    டயாலிசிஸ் சிகிச்சைக்கு மட்டுமே ஆன செலவு தொகை ரூ.7 கோடி மத்திய அரசால் இன்னமும் வழங்கப்படவில்லை.

    மேலும், இத்திட்டத்தின்படி நியமிக்கப்பட்ட மருத்துவர்களுக்கும் இன்னமும் ஊதியம் வழங்க முடியவில்லை.

    இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    மேலும், தேசிய சுகாதார இயக்கம், "பிரதான் மந்திரி சமக்ர ஸ்வாஸ்த்ய மிஷன்" என பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் வீணா தெரிவித்தார்.

    கேரள மக்களின் கலாச்சாரம் மற்றும் மாநில மொழியுடன் பொருந்தாமல் இருப்பதாலும், கிராமப்புற மக்களுக்கு புரியாத வகையில் உள்ளதாலும், பெயர் மாற்றத்திற்கு கேரள அரசு சம்மதிக்கவில்லை.

    • லாஸ்பேட்டை விவேகானந்தா மேல் நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் சிறப்பு முகாம் 7 நாட்கள் நடைபெறவுள்ளது.
    • மாநில நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் பேராசிரியர் சதீஷ்குமார் மற்றும் பள்ளிகளுக்கான நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் மதிவாணன் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தார்கள்.

    புதுச்சேரி:

    லாஸ்பேட்டை விவேகானந்தா மேல் நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் சிறப்பு முகாம் 7 நாட்கள் நடைபெறவுள்ளது. அதற்கான தொடக்க விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    மாணவர் கிருஷ்ணன் ஷர்மா வரவேற்பு உரையாற்றினார். பள்ளி முதல்வர் கீதா முன்னிலை வகித்தார். மாநில நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் பேராசிரியர் சதீஷ்குமார் மற்றும் பள்ளிகளுக்கான நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் மதிவாணன் ஆகியோர் முகாமை ெதாடங்கி வைத்தார்கள்.

    2-ம் நாள் முகாமில் இயற்கை பேரிடர் மீட்பு மற்றும் பாதுகாப்பு பயிற்சி சத்யசாய் பவுண்டேஷன் சார்பில் பயிற்சியாளர் மாநில ஒருங்கிணைப்பாளர் முருகன் மற்றும் பயிற்சியாளர் ராஜ்கமல் ஆகியோர் 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு செயல்முறை பயிற்சி வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை அருண் நாகலிங்கம் செய்து இருந்தார்.

    ×