search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National Commission for Scheduled Castes"

    • இதுகுறித்த, தமிழக அரசும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்.
    • விழிப்புணர்வு பணியில் சமூக ஊடகங்களும் ஈடுபடக் கோரிக்கை.

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஓட்டல் ஒன்றில் கழிவு நீர் தொட்டி சுத்திகரிப்புப் பணியின் போது, விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இன்று தேசிய பட்டியலின ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹால்டர் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியுள்ளதாவது:

    விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 21 லட்சம் வழங்கப்படும். இந்த இழப்பீட்டுத் தொகையில் 15 லட்சம் ரூபாயை சம்பந்தப்பட்ட ஹோட்டல் நிர்வாகமும், 6 லட்சம் ரூபாயை தமிழக அரசும் வழங்கும். இதுதவிர, இந்த குடும்பங்களுக்கு கருணைத் தொகையாக மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாயும், வீட்டுமனைப் பட்டாவும் அளிக்கப்படுவதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் மாவட்ட நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக, ஓட்டல் உரிமையாளரை அடுத்த 72 மணி நேரத்திற்குள் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, அந்த ஓட்டலின் பொதுமேலாளர், ஒப்பந்ததாரர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்வது எந்திரமயமாக்கப்பட்டு, மனிதர்கள் பயன்படுத்தப்படுவது சட்ட ரீதியாக தடை செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். இத்தகைய விழிப்புணர்வு பணியில் சமூக ஊடகங்களும், தமிழக அரசும் தீவிரமாக ஈடுபட வேண்டும். இந்த சம்பவம் குறித்து ஊடகங்களில் வெளியான செய்தியை அடுத்து ஆணையம் தாமாகவே முன்வந்து நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்பட்டால் அது போலி சான்றிதழ்.
    • போலி சான்றிதழ் வழங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்.

    சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேசிய ஆதி திராவிடர் ஆணைய துணைத் தலைவர் அருண் ஹல்தார் தெரிவித்துள்ளதாவது:

    ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் மதம் மாறும்போது, தானாக அந்த வகுப்பில் இருந்து வெளியேறி விடுகின்றனர். மதம் மாறிய பின்னும் அவர்களுக்கு ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர் என்று சாதி சான்றிதழ் இருந்தால் அது செல்லாது. மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்பட்டால் அது போலி சான்றிதழ்.

    இதுகுறித்தும் பல புகார்கள் ஆணையத்திற்கு தொடர்ந்து வருகிறது. போலி சான்றிதழ் வழங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட அளவில் குழு அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்திற்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்து 200 புகார்கள் வந்துள்ளன. இதில் 100 வழக்குகள் மீது விசாரணை நடந்து வருகிறது. இவற்றில் 60 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மக்கள் மீது நிகழும் வன்முறைகளில் ராஜஸ்தான் மாநிலம் முதல் இடத்திலும், தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது.

    தமிழகத்தில் பல இடங்களில் ஆதிதிராவிடர் மக்கள் சுடுகாடு செல்வதற்கு தனி பாதை உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. இதுதொடர்பாக சமீபத்தில் வந்த புகாரையடுத்து சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு சென்று நேரில் ஆய்வு செய்யப்பட்டது. அனைவருக்கும் ஒரே பாதை அமைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டது. இதுகுறித்த விழிப்புணர்வை மக்களுக்கு அரசு ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×