search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National Apparel Trade Fair"

    • தேசிய ஆயத்த ஆடை கண்காட்சி வருகிற ஆகஸ்டு 19-ந்தேதி துவங்கி 21ந் தேதி வரை நடைபெற உள்ளது.
    • ஜவுளி சார்ந்த துணை பொருட்களை 100க்கும் மேற்பட்ட அரங்குகளில் காட்சிப்படுத்துகின்றனர்.

    திருப்பூர் :

    இந்திய பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு வர்த்தக வாய்ப்புகளை பெற்றுத்தர இந்தியா நிட்பேர் அசோசியேஷன் மற்றும் ஏ.இ.பி.சி., இணைந்து திருப்பூரில் ஆண்டுதோறும் ஐ.கே.எப்., கண்காட்சியை நடத்தி வருகின்றன.

    முதல்முறையாக உள்நாட்டு சந்தைக்காக ஆடை தயாரிக்கும் நிறுவனங்களுக்காக தேசிய ஆடை வர்த்தக கண்காட்சி அவிநாசி பழங்கரையில் உள்ள ஐ.கே.எப்., வளாகத்தில் ஆகஸ்டு 19-ந்தேதி தொடங்க உள்ளது.இதுகுறித்து இந்தியா நிட்பேர் அசோசியேஷன் தலைவர் சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

    தேசிய ஆயத்த ஆடை கண்காட்சி வருகிற ஆகஸ்டு 19-ந்தேதி துவங்கி 21-ந் தேதி வரை நடைபெற உள்ளது. நாடு முழுவதும் உள்ள ஆடை உற்பத்தியாளர்கள், அனைத்துவகை ஆயத்த ஆடை ரகங்கள், துணி, நூல், நார், காதி, பட்டு, ஜவுளி சார்ந்த துணை பொருட்களை 100க்கும் மேற்பட்ட அரங்குகளில் காட்சிப்படுத்துகின்றனர்.

    தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பஞ்சாப், மேற்குவங்கம், மகாராஷ்டிரா,டெல்லி என நாடு முழுவதும் உள்ள ஆடை வர்த்தகர்கள் கண்காட்சியை பார்வையிட்டு வர்த்தக விசாரணை நடத்த உள்ளனர்.வணிக முகவர்கள், சில்லரை மற்றும் மொத்த விற்பனையாளர்கள் கண்காட்சியை பார்வையிடலாம்.

    கண்காட்சியில் அரங்குகள் அமைப்பதன்மூலம் ஆடை உற்பத்தி துறையினர் தங்கள் வர்த்தகத்தை பெருக்கி கொள்ள முடியும். 98941 24744 என்கிற எண்ணில் தொடர்புகொண்டு அரங்குகளை புக்கிங் செய்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    ×