என் மலர்

  நீங்கள் தேடியது "Muttur regulated market"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சனிக்கிழமைதோறும் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது.
  • 7,514 தேங்காய்கள் வரத்து இருந்தது

  வெள்ளகோவில் :

  வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 4 டன் வேளாண் விளைபொருட்கள் சனிக்கிழமை விற்பனையாயின.இந்த விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமைதோறும் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது.இந்த வார ஏலத்துக்கு, 7,514 தேங்காய்கள் வரத்து இருந்தது. இவற்றின் எடை 3,206 கிலோ.

  விலை கிலோ ரூ.18.15 முதல் ரூ.23.45 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.22.35.28 மூட்டை கொப்பரை வரத்து இருந்தது. எடை 725 கிலோ. விலை கிலோ ரூ.56.10 முதல் ரூ.75.90 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.68.35.ஏலத்தில் மொத்தம் 60 விவசாயிகள், 10 வணிகா்கள் பங்கேற்றனா். ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.1.12 லட்சம் என விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.

  ×