என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Muniappan Temple Kumbabhishekam"

    • கோட்டை மாரியம்மன், முனியப்பன் கோவில் கும்பாபி ஷேக விழா இன்று காலை நடைபெற்றது.
    • விழாவில் பங்கேற்ற கலந்து கொண்ட பல்லாயிரகணக்கான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கபட்டது.

    பெருந்துறை:

    பெருந்துறை பஸ் நிலையம் அருகே உள்ள கோட்டை மாரியம்மன், முனியப்பன் கோவில் கும்பாபி ஷேக விழா இன்று காலை நடைபெற்றது.

    இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 17-ந் தேதி தீர்த்தம் எடுத்து வருதல், மகா கணபதி ஹோமம், 2-ம் கால பூஜை, கோபுரகலசம் நிறுவுதல், 3-ம் கால பூஜை நடைபெற்றது.

    தொடர்ந்து இன்று மங்கல இசையும், 4-ம் கால பூஜையும் நடைபெ ற்றதை தொடர்ந்து கோபுரத்தின் மேல் உள்ள விமான கல சங்களுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    வேத மந்திரங்கள் முழங் மகா கணபதி, மகா மாரியம்மன் கும்பாபிஷேகம் நடைபெ ற்றது. இந்த கும்பாபிஷேக த்தை தொடர்ந்து கோட்டை மாரியம்மன், முனியப்பன் சாமிகளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெ ற்றது.

    கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற கலந்து கொண்ட பல்லாயிரகணக்கான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கபட்டது.

    ஸ்தபதி சந்தானகிருஷ்ணா மற்றும் விழா கமிட்டி குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×