என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mudalipalayam Panchayat"

    • தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • நோய் தடுப்பு மருத்துவத்–துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வார்டு உறுப்பினர்–கள் ஆகி–யோர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் முதலிபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நம்ம ஊர்சூப்பரு இயக்கம் என்ற தலைப்பில் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்றத்தலைவர் மயூரி பிரியா நடராஜ் தலைமை தாங்கினார். முகாமில் தூய்மை ஆய்வாளர்கள், குடிநீர் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் என 60-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர்.

    முகாமில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து குமாரசாமி ராஜா, தூய்மை இயக்கம் திருப்பூர் வட்டார ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம், ஊராட்சி செயலர் ராஜசேகரன், திட்ட ஒருங்கிணைப்பாளர் கருப்பு சாமி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×