என் மலர்
நீங்கள் தேடியது "Mourn"
திமுக தலைவர் கருணாநிதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், சோம்நாத் சாட்டர்ஜி ஆகியோர் மறைவுக்கு திமுக பொதுக்குழுவில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. #DMK #DMKGeneralCouncilMeeting
சென்னை:
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை தொடங்கியது. மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள், பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இக்கூட்டத்தில் கட்சியின் தலைவராக ஸ்டாலின் மற்றும் பொருளாளராக துரைமுருகன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து பொதுச்செயலாளர் க.அன்பழகன் முறைப்படி அறிவிக்க உள்ளார். #DMK #DMKGeneralCouncilMeeting

இக்கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி, வாஜ்பாய், சோம்நாத் சாட்டர்ஜி, சுர்ஜித் சிங் பர்னாலா, கோபி அன்னான் ஆகியோரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் வாசிக்கப்பட்டது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் கேரளாவில் மழை வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.