search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Moto Z4"

    மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ இசட்4 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.



    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இசட்4 ஸ்மார்ட்போன் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் அந்நிறுவனம் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் OLED ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இது குவாட்-பிக்சல் தொழில்நுட்பம் மூலம் 12 எம்.பி. தரத்தில் புகைப்படங்களை வழங்குகிறது. இத்துடன் OIS, செயற்கை நுண்ணறிவு அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. முன்புறம் 25 எம்.பி. செல்ஃபி கேமரா, 1.8µm குவாட் பிக்சல் மோட் வழங்கப்பட்டுள்ளது. இது செல்ஃபிக்களை 6.25 எம்.பி. தரத்தில் வழங்கும்.

    இத்துடன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 2.5D கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பேக், 6000 சீரிஸ் பாலிஷ் செய்யப்பட்ட அனுமினியம் ஃபிரேம், P2i ஸ்பிளாஷ் ப்ரூஃப் நானோ கோட்டிங் வழங்கப்பட்டுள்ளது. 3600 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் மோட்டோ இசட்4 ஸ்மார்ட்போனில் 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.



    மோட்டோ இசட்4 சிறப்பம்சங்கள்:

    - 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 OLED டிஸ்ப்ளே
    - 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர்
    - அட்ரினோ 612 GPU
    - 4 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை
    - 48 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7, PDAF,  OIS, லேசர் ஆட்டோபோகஸ்
    - 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 0.9um பிக்சல்
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
    - ஸ்பிளாஷ் ரெசிஸ்டண்ட்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 3600 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 15 வாட் டர்போ சார்ஜிங்

    மோட்டோ இசட்4 ஸ்மார்ட்போன் ஃபிளாஷ் கிரே மற்றும் ஃபிராஸ்ட் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 499.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.34,900) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் 48 எம்.பி. பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. #Motorola



    மோட்டோரோலா நிறுவனம் கடந்த ஆண்டு மோட்டோ இசட்3 மற்றும் இசட்3 பிளே ஸ்மார்ட்போன்களை மோட்டோ மாட்ஸ் வசதியுடன் அறிமுகம் செய்தது. மோட்டோ இசட்3 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் பற்றிய விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன.

    அந்த வகையில் மோட்டோ இசட்4 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விவரங்கள் இணையத்தில் லீக் ஆக்யுள்ளது. அதன்படி மோட்டோ இசட்4 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 675 ஆக்டா-கோர் பிராசஸர் கொண்டிருக்கும் என்றும் இதில் மோட்டோ மாட்ஸ் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    இத்துடன் மோட்டோ இசட்4 மாடலில் மோட்டோரோலாவின் 5ஜி மாட் மூலம் 5ஜி சேவையை பயன்படுத்தும் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. தரத்திலான OLED டிஸ்ப்ளே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    புகைப்படங்களை எடுக்க மோட்டோ இசட்4 ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது. இது குவாட் பிக்சல் தொழில்நுட்பத்தில் நான்கு பிக்சல்களை ஒன்றிணைத்து ஒற்றை பெரிய பிக்சலில் புகைப்படங்களை 12 எம்.பி. தரத்தில் வழங்கும் என கூறப்படுகிறது. முன்புறம் 25 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும் குரூப் செல்ஃபி மோட் கொண்டிருக்கும் என தெரிகிறது.

    இவற்றுடன் புகைப்படங்களை அழகாக்க ஏ.ஐ. மோட், நைட் விஷன் மோட், 6எம்.பி. போட்டோஸ் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படலாம். இவற்றை சக்தியூட்ட 3600 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் டர்போ சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம். புதிய ஸ்மார்ட்போனிலும் மோட்டோரோலா 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஸ்பிளாஷ் ப்ரூஃப் கொண்ட நானோ கோட்டிங் உள்ளிட்டவற்றை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மோட்டோ இசட்4 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டிருக்கும் என்றும் இத்துடன் கூகுளின் டிஜிட்டல் வெல்பீயிங் மற்றும் லென்ஸ் சேவைகள் வழங்கப்படும் என தெரிகிறது. இதுமட்டுமின்றி மோட்டோ டிஸ்ப்ளே, மோட்டோ ஆக்‌ஷன்ஸ், மோட்டோ எக்ஸ்பீரியன்சஸ் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.

    புகைப்படம் நன்றி: 91mobiles
    ×