search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "moto g stylus 5G"

    • புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS உள்ளது.
    • இந்த ஸ்மார்ட்போன் 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

    மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி ஸ்மார்ட்போனினை அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன் மிகமெல்லிய தோற்றம், வீகன் லெதர் ஃபினிஷ் மற்றும் பில்ட்-இன் ஸ்டைலஸ் கொண்டிருக்கிறது. இதனுடன் வரும் ஸ்டைலஸ் கொண்டு பயனர்கள் குறிப்பு எடுத்தல், டூடுல் உருவாக்குதல், புகைப்படங்களை எடிட் செய்தல் என ஏராளமான அம்சங்களை இயக்க முடியும்.

    அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் 6.7 இன்ச் Full HD+ pOLED 120Hz ஸ்கிரீன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 பிராசஸர், அட்ரினோ GPU, 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, ஆண்ட்ராய்டு 14 சார்ந்த மை யு.எக்ஸ். ஓ.எஸ். மற்றும் டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, 13MP அல்ட்ரா வைடு கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 3.5mm ஹெட்போன் ஜாக், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

    கனெக்டிவிட்டிக்கு 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப் சி போர்ட் உள்ளது. 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்பட்டும் மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி மாடல் 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 15 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

    புதிய மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி ஸ்மார்ட்போன் காரமெல் லேட் மற்றும் ஸ்கார்லெட் வேவ் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 399.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 20 ஆயிரத்து 450 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ×