search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mother-daughter stole 5lb gold chain"

    • ஊழியரின் கவனத்தை திசை திருப்பி எடுத்து ெசன்றனர்.
    • வடமாநில வாலிபர்கள் கேலி, கிண்டல் செய்தனர்.

    கோவை:

    கோவை பெரிய கடைவீதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது48). நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று சிவக்குமார் கடையில் இருந்தபோது 2 பெண்கள் பர்தா அணிந்த படி கடைக்கு வந்தனர். அவர்கள் 5 பவுன் தங்க செயின் வேண்டும் என கேட்டனர். கடையில் இருந்த ஊழியர் நகைகளை காண்பித்து கொண்டு இருந்தார். ஒவ்வொரு நகையாக வாங்கி பார்த்த அவர்கள் செயின் வேண்டாம் என கூறிவிட்டு சென்று விட்டனர். அவர்கள் சென்ற பின்னர் ஊழியர் நகைகளை எடுத்து வைப்பதற்காக சோதனை செய்தனர்.

    அப்போது அதில் 5 பவுன் எடையில் கவரிங் நகை இருந்தது. அந்த 2 பெண்களும் ஊழியரின் கவனத்தை திசை திருப்பி கவரிங் செயினை வைத்துவிட்டு 5 பவுன் தங்க செயினை திருடி சென்றது தெரியவந்தது. இதில் அதிர்ச்சியடைந்த சிவக்குமார் இது குறித்து பெரியகடைவீதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    அதில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் நகையை திருடி சென்றது மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள கீழ மாதிரையை சேர்ந்த சுமதி(வயது50) என்பதும், அவரது மகள் பிரியதர்ஷினி(28) ஆகியோரை கைது செய்தனர். மேலும் இவர்கள் வேறு எங்கேயாவது இதுபோன்று கைவரிசை காட்டினார்களா என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை கணபதி அத்திப்பாளையம் பிரிவை சேர்ந்தவர் ஜெயபாலன்(32). சொந்தமாக நாட்டு மருந்து கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு ஜெயபாலன் வீட்டு மாடியில் நின்று செல்போனில் பேசினார்.

    அப்போது பக்கத்து மேன்சனில் குடியிருக்கும் வடமாநில வாலிபர்கள் ஜெயபாலனை கேலி, கிண்டல் செய்தனர். இதனையடுத்து ஜெயபாலன் அங்கு சென்று அவர்களை கண்டித்தார். இதில் ஆத்திரமடைந்த வடமாநில வாலிபர்கள் ஜெயபாலனை உருட்டுக்கட்டையால் தாக்கி அவர் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயபாலனை தாக்கிய வடமாநில வாலிபர்களை தேடி வருகிறார்கள்.

    கோவை செல்வபுரம் சேரன் நகரை சேர்ந்தவர் மும்தாஜ் (65). சம்பவத்தன்று மும்தாஜ் போத்தனூரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக சென்றார். அங்கிருந்து உக்கடம் பஸ் நிலையம் செல்வதற்காக தனியார் பஸ்சில் ஏறினார். பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஆத்துப்பாலம் அருகே பஸ் சென்றபோது, யாரோ மர்ம நபர் மும்தாஜ் கழுத்தில் அணிந்து இருந்த 6 பவுன் தங்க செயினை பறித்து தப்பி சென்றனர். இது குறித்து அவர் குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை கோணவாய்க்கால்பா ளையம் அற்புதம் நகரில் ஸ்ரீ புற்றுக்கண் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. கடந்த 16-ந் தேதி பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது, கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் ரூ.5 ஆயிரம் பணத்தை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் போத்தனூர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×