search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Moringa seed"

    • முருங்கை விதை வழங்கும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • விதைகள் தோட்டக் கலைத்துறையில் கொள்முதல் செய்யப்பட்டு நடவு செய்யப்படுகின்றன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி, கமுதி, மண்டபம் வட்டாரங்களில் முருங்கை விதைகளை வீடுகளில் நடவு செய்யும் பணிகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன் தொடங்கி வைத்தார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை யின்மூலம் செயல்படுத்தப் படும் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தை களுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் செயல்பாடாக திருப்புல்லாணி, மண்டபம், கமுதி வட்டாரங்களில் உள்ள அனைத்து வீடுக ளுக்கும் முருங்கை விதை களை வழங்கும் பணி தொடங்கி வைக்கப் பட்டுள்ளது.

    முருங்கை விதைகளை நடவு செய்வதன் நோக்கம் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வளரிளம் பெண்கள் ரத்த சோகை யின்றி ஆரோக்கியமான உடல்நிலையுடன் குழந்தைகள் பெற்றெடுக்க உதவுவது, 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்துடன் வளரவும் முருங்கை விதைகள் நடவு செய்யப்படுகின்றன. விதைகள் தோட்டக் கலைத்துறையில் கொள்முதல் செய்யப்பட்டு நடவு செய்யப்படுகின்றன.

    நடவு செய்யப்படும் விதைகளை முறையாக பராமரித்து பயன்பெற்றிட பயனாளிகளுக்கு அறிவுறுத்தவும், மருத்துவ குணங்களை அறிந்திடவும், அங்கன்வாடி பணியா ளர்கள், சமூக நலத்துறை களப்பணியாளர்கள் ஒருங்கிணைந்து பராமரிக்கவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    எனவே பயனாளிகள் தங்கள் வீடுகளில் நடவு செய்யப்படும் முருங்கை விதைகளை முறையாக பராமரித்து அதன் மூலம் கிடைத்திடும் நன்மைகளை பெற்று ஊட்டச்சத்து குறை பாடு இல்லாமல் வாழ வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு) தேன்மொழி, திட்ட அலுவலர் (ஒருங்கி ணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் விசுபாவதி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவ லர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×