என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "monkey problem"

    மாமல்லபுரத்தில் புராதன சின்னம் பகுதியில் குரங்குகள் தொல்லையால் சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களான அர்ஜுனன் தபசு, கடற்கரை கோவில், ஐந்து ரதம், பிடாரி ரதம், புலிக்குகை மற்றும் மலைப்பகுதி குடவரை கோவில்களைகான வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.

    புராதன சின்னங்கள் அனைத்தும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

    இங்கு குரங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    சில சுற்றுலா பயணிகள் குரங்குகளை சீண்டுவதால் சிலரை கடித்த சம்பவங்களும் நடந்துள்ளது.

    மேலும் சுற்றுலா பயணிகளின் குளிர் பானங்கள், உணவுகளை பறித்து குரங்குகள் அட்டகாசம் செய்து வருகின்றன. குரங்குகளை கட்டுப்படுத்துவது வனத்துறையினர் பொறுப்பு என்பதால் தொல்லியல்துறை காவலர்கள் இதனை கண்டு கொள்வதில்லை.

    இதனால் மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகளுக்கும் குரங்குகளால் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. குரங்குகளை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள்கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×