search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Missile Strikes"

    • செர்னிஹிவ் நகரத்தில் நூற்றாண்டு கால பழமையான தேவாலயங்கள் உள்ளன
    • இந்த தாக்குதலில் 6-வயது குழந்தை ஒன்றும் பலியாகி இருக்கிறது

    கடந்த 2022 பிப்ரவரி மாதம் 22 அன்று, சிறப்பு ராணுவ நடவடிக்கை எனும் பெயரில் ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை கடுமையாக எதிர்த்து, ஆக்ரமிப்புக்கு பணிய மறுத்து, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளதவியுடனும், ராணுவ உதவியுடனும் உக்ரைன், ரஷியாவிற்கு எதிராக போரிட்டு வருகிறது.

    இப்போரில் இரு நாடுகளிலும் கடும் உயிர்ச்சேதங்களும், கட்டிட சேதங்களும் ஏற்பட்டு வருகிறது. போர் 18 மாதங்களுக்கு மேலாக 540 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. இரு தரப்பும் ஏவுகணைகள், டிரோன்கள் மற்றும் கடல் டிரோன்கள் மூலம் பரஸ்பரம் தாக்கி வருகின்றனர்.

    இந்நிலையில் ரஷியா மீண்டும் உக்ரைன் மீது ஒரு ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

    உக்ரைனின் தலைநகர் கீவிற்கு வடக்கில் 145 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது செர்னிஹிவ் நகரம். இந்நகரம் இரு பக்கமும் அழகான மரங்கள் நிறைந்த சாலைகளுக்கும், நூற்றாண்டு கால பழமையான தேவாலயங்கள் புகழ் பெற்றது.

    இந்நகரின் மத்தியில் உள்ள ஒரு சதுக்கத்தின் அருகே ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதில், மத விடுமுறையை கொண்டாட அப்பகுதியில் உள்ள ஒரு சர்ச்சிற்கு சென்று கொண்டிருந்த மக்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

    பலியானவர்களில் 6-வயது குழந்தை ஒன்றும் அடங்கும். 90 பேர் காயமடைந்துள்ளனர். அவற்றில் 12 பேர் குழந்தைகள் மற்றும் 10 பேர் காவல் அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    "ரஷியாவின் தாக்குதலில் அந்நகரில் அந்த சதுக்கம், ஒரு பாலிடெக்னிக் பல்கலைக்கழகம் மற்றும் கலையரங்கம் ஆகியவை சேதமடைந்துள்ளன" என சுவீடன் நாட்டிற்கு சென்றிருக்கும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி சமூக வலைதளத்தில் தெரிவித்தார்.

    இப்போரினால் உலகளாவிய பொருளாதாரமும், உணவு தானிய வினியோகமும் பெருமளவில் வீழ்ச்சியடைந்து விட்டது. இதனால் போர் விரைவில் முடிவிற்கு வந்து அமைதி திரும்ப வேண்டும் என நடுநிலையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • உக்ரைன் மக்களுக்கான அமெரிக்காவின் ஆதரவை ரஷிய தாக்குதல்கள் வலுப்படுத்துகிறது.
    • போர்க் குற்றங்களுக்கு புதின் மற்றும் ரஷியாவை பொறுப்பு ஏற்க வைப்போம்.

    வாஷிங்டன்:

    கிரீமியாவை ரஷியாவுடன் இணைக்கும் முக்கியமான பாலம் அண்மையில் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உக்ரைன் நடத்தியதாக குற்றம் சாட்டிய ரஷியா,  உக்ரைன் தலைநகர் கீவ் பகுதிகளில் நேற்று அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. குறைந்தபட்சம் 5 இடங்களில் ஏவுகணைகள் விழுந்து வெடித்ததாக கூறுப்படுகிறது. இது குறித்த வீடியே சமூக வளைதளங்களில் வைரலாகின.

    இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷிய ஏவுகணைத் தாக்குதல்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    ரஷியா நடத்திய தாக்குதல்களில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர், ஏராளமானோர் காயமடைந்தனர். உக்ரைன் மக்கள் மீது புதின் நடத்தும் சட்ட விரோதப் போரின் முழுமையான மிருகத்தனம், மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மக்களுக்கு அமெரிக்கா நீண்ட காலம் ஆதரவு தர வேண்டும் என்ற எங்கள் உறுதிப்பாட்டை, ரஷியாவின் இந்த தாக்குதல்கள் வலுப்படுத்துகிறது.

    எங்களது கூட்டாளிகள் மற்றும் நட்பு நாடுகளுடன் சேர்ந்து, ரஷியாவிற்கு நாங்கள் தொடர்ந்து பாடம் புகட்டுவோம். போர்க்குற்றங்களுக்கு புதின் மற்றும் ரஷியாவை பொறுப்பு ஏற்க வைப்போம். உக்ரைன் ராணுவம் தங்கள் நாட்டையும், சுதந்திரத்தையும் பாதுகாக்க தேவையான ஆதரவை வழங்குவோம். இவ்வாறு பைடன் குறிப்பிட்டுள்ளார்.

    ×