search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister KSSR Ramachandran"

    • உயிரிழந்த கடையம் பகுதியை சேர்ந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி கடையம் யூனியன் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
    • அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கலந்து கொண்டு உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

    கடையம்:

    தென்காசி மாவட்டம், கடையம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்திற்கு சுற்றுலா சென்ற பஸ் குன்னூர் அருகே பள்ளத்தில் கவிழ்ந்து , விபத்துக்குள்ளானதில் கடையம் பகுதியை சேர்ந்த 7 பேர் உள்ளிட்ட 9 பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    இதையடுத்து உயிரிழந்த கடையம் பகுதியை சேர்ந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி கடையம் யூனியன் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கடையம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கலந்து கொண்டு உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். முன்னதாக அவர்களது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், ஆர்.டி.ஒ. லாவன்யா, தென்காசி எம்.பி. தனுஷ்குமார், சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ராஜா, கடையம் யூனியன் சேர்மன் செல்லம்மாள், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன், மாநில சுற்றுச்சூழல் அணித்தலைவர் பூங்கோதை ஆலடிஅருணா, மாவட்ட ஊராட்சித்தலைவர் தமிழ்செல்விபோஸ், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் செல்லத்துரை, சேக்தாவூது, ஒன்றிய செயலாளர்கள் அழகுசுந்தரம், ரவிசங்கர், சீனித்துரை, சுரேஷ், பேரூர் செயலாளர் லட்சும ணன்,முன்னாள் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் முத்துக்குமார், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட பிரதிநிதி பொன்செல்வன், தென்காசி யூனியன் துணை சேர்மன் கனகராஜ் முத்து பாண்டியன், மாவட்ட துணைச் செய லாளர்கள் தமிழ்ச்செல்வன், கென்னடி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×