search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Militant Arrested"

    • சேலத்தில் பதுங்கி இருந்த மற்றொரு பயங்கரவாதியை மத்திய குற்றப்பிரிவு உதவி போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் கைது செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    • அவரது பெயர் அப்துல் அலி என்ற ஜூபா என்பதாகும். அவரை பெங்களூரு அழைத்து சென்று விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    சேலம்:

    பெங்களூரு திலக்நகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கி இருந்த அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த பயங்கரவாதியான அக்தர் உசேன் லஸ்கர் என்பவரை நேற்று முன்தினம் இரவு பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்திருந்தனர்.

    பின்னர் நேற்று மாலையில் அவரை தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அவரிடம் நடத்திய விசாரணையில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய மற்றொரு நபர் பற்றிய தகவல்களை போலீசாருக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அவர் கொடுத்த தகவலின் பேரில் சேலத்தில் பதுங்கி இருந்த மற்றொரு பயங்கரவாதியை மத்திய குற்றப்பிரிவு உதவி போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் கைது செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவரது பெயர் அப்துல் அலி என்ற ஜூபா என்பதாகும். அவரை பெங்களூரு அழைத்து சென்று விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    • ஜம்மு காஷ்மீரில் உள்ள தோடா மாவட்டத்தில் இன்று பயங்கரவாதி ஒருவன் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டான்.
    • அவனிடம் இருந்து ஒரு சீன துப்பாக்கி, 17 தோட்டாக்கள் வெடி மருந்துகள் மற்றும் செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீரில் உள்ள தோடா மாவட்டத்தில் இன்று பயங்கரவாதி ஒருவன் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டான்.

    அவனது பெயர் பரீத் அகமது என்றும் தோடா மாவட்டம் கோட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. அந்த மாவட்டத்தில் உள்ள போலீஸ்காரர்களை தாக்குவதாக பாகிஸ்தானை சேர்ந்தவர்களால் உத்தரவிடப்பட்டு இருந்தது விசாரணையில் தெரியவந்தது. சரியான நேரத்தில் பயங்கரவாதிகளை பிடித்ததால் சதி திட்டம் முறியடிக்கப்பட்டது.

    அவனிடம் இருந்து ஒரு சீன துப்பாக்கி, 17 தோட்டாக்கள் வெடி மருந்துகள் மற்றும் செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பயங்கரவாதியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ×