சேலத்தில் பதுங்கி இருந்த பயங்கரவாதி கைது

சேலத்தில் பதுங்கி இருந்த மற்றொரு பயங்கரவாதியை மத்திய குற்றப்பிரிவு உதவி போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் கைது செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவரது பெயர் அப்துல் அலி என்ற ஜூபா என்பதாகும். அவரை பெங்களூரு அழைத்து சென்று விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
சேலத்தில் பதுங்கி இருந்த பயங்கரவாதி கைது
Published on

சேலம்:

பெங்களூரு திலக்நகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கி இருந்த அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த பயங்கரவாதியான அக்தர் உசேன் லஸ்கர் என்பவரை நேற்று முன்தினம் இரவு பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்திருந்தனர்.

பின்னர் நேற்று மாலையில் அவரை தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அவரிடம் நடத்திய விசாரணையில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய மற்றொரு நபர் பற்றிய தகவல்களை போலீசாருக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவர் கொடுத்த தகவலின் பேரில் சேலத்தில் பதுங்கி இருந்த மற்றொரு பயங்கரவாதியை மத்திய குற்றப்பிரிவு உதவி போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் கைது செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவரது பெயர் அப்துல் அலி என்ற ஜூபா என்பதாகும். அவரை பெங்களூரு அழைத்து சென்று விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com