search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mid Day Meal"

    குழந்தைகள் போதிய ஊட்டச்சத்து பெற மதிய உணவுத் திட்டம் மூலம் பள்ளிகள், அங்கன்வாடிகளில் பால் மற்றும் பால் பொருட்களை அளிப்பதற்கு அரசு ஏற்பாடு செய்து வருகிறது. #Milk #Anganwadi
    புதுடெல்லி:

    இந்தியாவில் கடந்த நிதியாண்டில் பால் உற்பத்தி 176.35 மில்லியன் டன்னாக அதிகரித்திருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. வரும் 2021-22-ம் ஆண்டில் இந்தியாவில் பால் உற்பத்தி 254.5 மில்லியன் டன்னாக உயரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பாலுக்கு போதிய விலை கிடைக்காததால் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண மகாராஷ்டிராவில் பால் உற்பத்தியாளர்கள் சமீபத்தில் தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    பால் உற்பத்தியாளர்களால் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் பாலை பயன்படுத்தும் நோக்கிலும் பாலுக்கு போதிய விலை கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும் மத்திய அரசு புதிய திட்டத்தை தீட்டியது. அதாவது பள்ளிகள், அங்கன்வாடிகளில் மதிய உணவு திட்டத்தின் கீழ் வாரத்துக்கு 2 நாட்கள் பால் வழங்கலாம் என்று திட்டம் வகுத்தது.

    இந்த திட்டத்துக்கு மாநில அரசுகளின் கருத்துக்களை மத்திய அரசு கேட்டிருந்தது. இது தொடர்பாக மத்திய கால்நடை மற்றும் பால் உற்பத்தித்துறை செயலாளர் தருண் ஸ்ரீதர் கூறியதாவது:-


    மதிய உணவுத் திட்டம் மூலம் பள்ளிகள், அங்கன் வாடிகளில் பால் மற்றும் பால் பொருட்களை அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டிருந்தது. இதற்கு பெரும்பாலான மாநிலங்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளன.

    ராஜஸ்தான் மாநிலம் ஏற்கெனவே இதை செயல்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் எதிர்கால சந்ததியினர் போதிய ஊட்டச்சத்து பெறுவதை உறுதி செய்ய முடியும் என்று அரசு கருதுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Milk #Anganwadi
    ×