search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mg 4"

    • எம்ஜி மோட்டார் நிறுவனம் புது எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடலை அறிமுகம் செய்து உள்ளது.
    • இந்த கார் முதற்கட்டமாக ஐரோப்பாவில் விற்பனை செய்யப்பட உள்ளது.

    எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் ஹேச்பேக், எம்ஜி 4 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் முதற்கட்டமாக ஐரோப்பாவில் விற்பனை செய்யப்பட உள்ளது. போக்ஸ்வேகன் நிறுவனத்தின் ஐடி.3 மாடலுக்கு போட்டியாக புது எம்ஜி4 அறிமுகமாகி இருக்கிறது. சில நாடுகளில் புதிய எம்ஜி 4 மாடல் கியா நிரோ EV மாடலுக்கும் போட்டியாக அமைகிறது.

    புதிய எம்ஜி 4 மாடல் முழு சார்ஜ் செய்தால் 450 கிமீ வரையிலான ரேன்ஜ் கொண்டிருக்கும். இத்துடன் அதிக இடவசதி கொண்ட இண்டீரியர் மற்றும் அதிகளவு அம்சங்கள் வழங்கப்படுகிறது. சீன சந்தையில் எம்ஜி 4 மாடல் எம்ஜி முலன் எனும் பெயரில் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த ஹேச்பேக் மாடல் எம்ஜி மோட்டார் தாய் நிறுவனமான SAIC-இன் மாட்யுலர் ஸ்கேலபில் பிளாட்பார்ம் (MSP) தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.


    இதே பிளாட்பார்மில் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் எதிர்கால மாடல்களும் உருவாக்கப்பட இருக்கின்றன. இந்த பிளாட்பார்மில் காரின் வீல்பேஸ் 2650mm இல் இருந்து அதிகபட்சம் 3100mm வரையில் வழங்கப்படுகிறது. மேலும் பேட்டரியை பொருத்தவரை 40 கிலோவாட் ஹவர்-இல் இருந்து அதிகபட்சம் 150 கிலோவாட் ஹவர் வரையிலான திறன் வழங்கப்படலாம். இதில் பயன்படுத்தப்படும் பேட்டரி புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பேக் பேட்டரி முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

    ஐரோப்பாவில் விற்பனை செய்யப்பட இருக்கும் எம்ஜி 4 மாடலில் 167 ஹெச்.பி. பவர், 201 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும் ரியர் வீல் டிரைவ் பவர்டிரெயின்கள் வழங்கப்பட இருக்கிறது. இதே காரின் டூயல் மோட்டார், 4 வீல் டிரைவ் யூனிட் எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த காரின் 167 ஹெச்.பி. பவர் கொண்ட வேரியண்டில் 51 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படுகிறது.

    51 கிலோவாட் ஹவர் பேட்டரியை முழு சார்ஜ் செய்தால் 350 கிமீ வரை பயணிக்கலாம். எம்ஜி 4 காரின் 201 ஹெச்.பி. மற்றும் 443 ஹெச்.பி. வேரியண்ட்களில் 64 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரிகள் வழங்கப்பட உள்ளன. இவை முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 450 கிமீ வரையிலான ரேன்ஜ் வழங்கும். 

    ×