search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Methods for protecting"

    • நெல் பயிர்களில் இலை சுருட்டுப் புழுக்களின் தாக்குதல் பொருளாதார சேத அளவுக்குள் காணப்படுகிறது.
    • வரப்புகளை களைகள் இன்றி பராமரித்தால் இதன் பாதிப்பு குறைகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தற்போது சம்பா நெல் நடவுப்பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளது. சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிரில் இலை சுருட்டுப் புழுக்களின் தாக்கு தல் ஆங்காங்கே காணப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதனை கட்டுப்படுத்தும் வழி முறைகள் குறித்து ஈரோடு மாவட்ட வேளா ண்மை இணை இயக்குநர் எஸ்.வெங்கடேசன் தெரிவித்துள்ளதாவது:-

    கடந்த 15 நாள்களுக்கு முன்பு நடவு செய்த நெல் பயிர்களில் ஆங்காங்கே இலை சுருட்டுப் புழுக்களின் தாக்குதல் பொருளாதார சேத அளவுக்குள் காணப்படுகிறது.

    பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் போதும் தழைச்சத்து குறிப்பாக யூரியா அதிகமாக இடும் போதும் இந்த புழுவின் தாக்குதல் அதிகரிக்கும்.

    இதன் தாக்குதலின்போது இலைகள் நீளவாக்கில் மடிக்கப்பட்டு வெண்மை நிறமாக மாறி காய்ந்துவிடும். தீவிர தாக்குதலின்போது, நெல் வயல் வெண்மை நிறத்தில் காய்ந்ததுபோல இருக்கும். இலைகள் நீளவா க்கில் சுருண்டு புழுக்கள் அதற்குள் இருக்கும்.

    இதன் அந்துப்பூ ச்சியானது மஞ்சளான பழுப்பு நிற இறக்கைகளை கொண்டது. அதில் கருப்பு அலை போன்ற கோடுகள் காணப்படும். இறக்கை களின் ஓரத்தில் கருப்பு நிற பட்டையான கோடுகள் காணப்படும்.

    தொடர்ந்து நெற்பயிரை சாகுபடி செய்வதாலும், பரிந்துரையை விட அதி கமாக தழைச்சத்து இடுவதா லும், வரப்புகளில் களைகள் அதிகமாக இருந்ததாலும், பரிந்துரை செய்யப்படாத பூச்சி க்கொல்லி மருந்து களை தெளிப்பதாலும் இதன் தாக்குதல் அதிகரிக்கிறது.

    நாற்றுகளை போதிய இடைவெளிவிட்டு நடுவதால் காற்றோட்டம், சூரிய ஒளி நன்கு கிடைக்கிறது. அதனால் பூச்சிகளின் தாக்குதல் குறைகிறது.

    வரப்புகளை களைகள் இன்றி பராமரித்தால் இதன் பாதிப்பு குறைகிறது. முந்தைய பயிரின் அடித்தாள் கட்டை மூலம் பூச்சிகள் அடுத்த பயிருக்கு பரவுவதால் அடித்தாள் கட்டைகளை நன்கு உழவு செய்து அமுக்கிவிட வேண்டும்.

    யூரியா, அமோனியம் குளோரை, அமோனியம் சல்பேட் ஆகிய உரங்களைத் தேவையான அளவில் மட்டுமே இட வேண்டும். வேப்பங்கொட்டை கரைசல் 5 சதவீதம் அல்லது 3 சதம் வேம்பு எண்ணெயை தெளிக்கலாம்.

    டிரைகோ கிரம்மா கைலோனிஸ் என்ற முட்டை ஒட்டு ண்ணியை ஒரு ஏக்கருக்கு ஒவ்வொரு முறையும் 2 சிசி என்ற அளவில் நடவு செய்ததில் இருந்து 37, 44, 51 ஆகிய நாள்களில் 3 முறை விடுவது நல்ல பலனைத் தரும்.

    இந்த ஒட்டுண்ணிகள் தேவைப்படும் விவசாயிகள் கோபி கரும்பு ஒட்டுண்ணி மையத்தை அணுகலாம்.

    மேலும் புழுக்களின் தாக்குதல் அதிகரித்தால் ஏக்கருக்கு 20 கிராம் புளுபென்டிமைடு அல்லது 60 கிராம் குளோரான் டிரனிளிபுரோல் என்ற அளவில் ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளை தெளித்து இலை சுருட்டுப் புழுவைக் கட்டுப்படுத்த லாம்.

    மேலும் விவரங்களுக்கு சம்மந்தப்பட்ட வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×